கேப்டன் ஆலயத்தில் உணவிட்ட பொறியாளர் பிரிவினர்!
ஜி.சாந்தகுமார்,
அனைவராலும் கேப்டன் என்று அழைக்கப்பட்டவர் தேமுதிக தலைவர் விஜயகாந்த். அவரது மறைவுக்கு பின்னர் அவரது உடல் கோயம்பேடில் உள்ள தலைமைக் கழகத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தை காண்பதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் இன்றளவுக்கும் வந்து சென்று கொண்டிருக்கிறார்கள்.
அப்படி வந்து செல்லும் மக்கள் அனைவருக்கும் இலவசமாக உணவளிப்பதை தேமுதிக தலைமை வழக்கமாக கொண்டுள்ளது.

அந்தவகையில் 313 மற்றும் 314 ஆம் தினத்தில் அக்கட்சியின் பொறியாளர் பிரிவினர் சார்பாக கழக செயலாளர் வேலூர் ஸ்ரீதர், கழக துணைச்செயலாளர்கள் ஆனந்தராஜ், ஜெயராமன், ராஜாபன்னீர் மற்றும் கிருஷ்ணன் ஆகியோர் ஆயிரக்கணகான மக்களுக்கு விஜிடெபில் ரைஸ் மற்றும் சாம்பார் சாதம் வழங்கினர்.

admin
