ஆட்சியர் அம்மா ப்ளீஸ் பிரஸ் அறைக்கு நல்ல குடிநீர் தாருங்கள்!
ம.பா.கெஜராஜ்,
வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் செய்தியாளர்களுக்காக ஒரு அறை அமைக்கப்பட்டிருக்கிறது. கடந்த 1988-1990 காலகட்டத்தில் முதலமைச்சராக இருந்த மு.கருணாநிதி அவர்களால் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டப்பட்ட போது, கீழ் தளத்தில் இடதுபுறம் செய்தி மக்கள் தொடர்பு அலுவலகமும், அதற்கு மறுபுறம் வலப்பக்கம் செய்தியாளர்களுக்கான அறையும் திட்டமிட்டு கட்டப்பட்டது.
இதனால் செய்தி சேகரிக்க பத்திரிகையாளர்களுக்கு அரசாங்கம் வசதி ஏற்படுத்தி கொடுத்திருந்தது.
இந்த அறையானது பல சமயங்களில் சரிவர பராமரிக்கப்படுவதில்லை. அப்படிப்பட்ட நேரங்களில் செய்தியாளர்கள் அதனுள் செல்லவே அச்சப்பட்டனர்.
அது போன்ற நேரங்களில் ஆட்சியர் கட்டிடத்தில் பாதுகாப்பு பணிக்கு ஈடுபடுத்தப்பட்ட போலீசார் அதனுள் ஓய்வு எடுப்பதற்காக கையகப்படுத்திக் கொள்வார்கள்.
பின்னர் போராடி மீண்டும் அதை செய்தியாளர் அறையாக பயன்படுத்த ஆட்சியர்கள் பலர் காலகட்டத்துக்கு ஏற்ப உதவி செய்து கொடுப்பார்கள்.

இந்நிலையில் தற்போது கடந்த நான்கைந்து மாதங்களாக மேற்படி செய்தியாளர்கள் அறையில் குடிதண்ணீர் வசதி இல்லை. வாஷ்பேசினும் சரிந்து காணப்படுகிறது.
குடிதண்ணீருக்காக அமைக்கப்பட்டிருக்கும் கருவி பழுதாகி ஃபில்டர்கள் துருபிடித்துக் காணப்படுகின்றன. கூடவே இருக்கை வசதிகளும் சரிவர இல்லை. சுவரில் வர்ணம் இல்லை. வால்கிளாக் காணப்படவில்லை. ஒயரிங் சேதமடைந்துள்ளது.
ஆகவே புதிய ஆட்சியர் அவர்கள், இது குறித்து நேரில் விசிட் அடித்து செய்தியாளர் அறையை வர்ணம் பூசி, தண்ணீர் வசதி செய்து தரும்படியும், மேஜை நாற்காலிகளை சீர்படுத்தி கொடுத்து செய்தி சேகரிப்பதற்கு அரசு கட்டிக் கொடுத்திருக்கும் இடத்தை முழுமையாக பயன்படுத்திடும் வகையில் அமைத்துக் கொடுக்கவும் செய்தியாளர்கள் கோருகிறார்கள்.

admin
