ஏழை பெண்களை பார்த்ததும் நிற்காமல் வேகம் எடுத்த அரசு பேருந்து!
ஜி.குலசேகரன்,
வாணியம்பாடி அருகே கையை காட்டியும் நிற்காத அரசு பேருந்து -ஓடிச்சென்றும் பெண்களை ஏற்றாமல் சென்ற அவலம்.. வீடியோ வைரல்
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி பேருந்து நிலையத்திலிருந்து ஆலங்காயம் நோக்கி அரசு பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு கொத்தகோட்டை வழியாக சென்று கொண்டிருந்தது.அப்போது ஜம்புபள்ளம் பகுதியில் பேருந்து வருவதை கண்ட இரண்டு பெண்கள், முன்கூட்டியே கையை காட்டி பேருந்தை நிறுத்த முயன்றுள்ளனர்.
ஆனால், பேருந்து சற்று தூரம் சென்று நின்றதாக கூறப்படுகிறது.இதையடுத்து, பேருந்தில் ஏறுவதற்காக இரண்டு பெண்களும் ஓடிச் சென்றுள்ளனர். இருந்தபோதிலும், அவர்களை ஏற்றாமல் அரசு பேருந்து புறப்பட்டுச் சென்றதாக கூறப்படுகிறது.
மகளிருக்கு அரசு பேருந்துகளில் இலவச பயணம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பெண்களை ஏற்றாமல் அரசு பேருந்து சென்ற சம்பவம் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதாகவும், பெண்களை ஏற்றிச் செல்லாமல் புறப்படும் அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது போக்குவரத்துத் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், பெண்கள் பேருந்தில் ஏற முயன்றும் அவர்களை ஏற்றாமல் பேருந்து புறப்பட்டுச் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எப்புடி நடவடிக்கை எடுப்பாங்க பாருங்க!

admin
