சாட்சியை கொலை செய்ய உடந்தை! போலீஸ் எஸ். ஐ.கைது!
தி.மைக்கேல்,
சாட்சியை கொல்ல முயன்ற வழக்கு தொடர்பாக, சஸ்பெண்ட் எஸ்.ஐ.,யை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கணபதிபாளையத்தைச் சேர்ந்த தங்கவேல், 45, கடந்த ஆண்டு கொல்லப்பட்ட ஐகோர்ட் வக்கீல் முருகானந்தம் வழக்கில், புகார்தாரராகவும், முக்கிய அரசு சாட்சியாகவும் உள்ளார்.
கடந்த 7-ம் தேதி டூ - வீலரில் சென்ற அவரை, காரில் வந்த இருவர் அரிவாளால் வெட்டினர். ஆனால் அவர் அதிர்ஷ்டவசமாக தப்பினார்.
இந்த வழக்கில், பள்ளி தாளாளர் தண்டபாணியின் உறவினர் நந்தகுமார், 52, கூலிப்படையை ஏற்பாடு செய்த பாபு, 38, பணப்பட்டு வாடா செய்த தண்டபாணியின் மனைவி சரஸ்வதி, 55, சேலத்தை சேர்ந்த ஹேமா, 49, ஆகியோரை தாராபுரம் போலீசார் ஏற்கனவே கைது செய்தனர்.
அப்படியிருக்க கொலை சதிக்கு உடந்தையாக இருந்ததாக திருநெல்வேலியைச் சேர்ந்த, சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு போலீஸ் படை எஸ்.ஐ., சரவணன், 52, நேற்று கைது செய்யப்பட்டார்.
இது குறித்து போலீசா தரப்பில்¢ கூறுகையில், 'முருகானந்தம் கொலை வழக்கில் கைதாகி பாளையங்கோட்டை சிறையில் இருந்த தண்டபாணிக்கும், வேறு வழக்கில் கைதாகி, அதே சிறையில் இருந்த எஸ்.ஐ., சரவணனுக்கும் ஏற்பட்ட பழக்கத்தில், இந்த திட்டம் தீட்டப்பட்டுள்ளது. சரவணனிடம் தீவிர விசாரணை நடை பெறுகிறதாம்.
திருநெல்வேலியில், ஐ.டி., ஊழியர் கவின் செல்வகணேஷ் ஆணவக்கொலை வழக்கில், கைதான சுர்ஜித்தின் தந்தை தான் இந்த சரவணன் என்பது சுட்டிக்காட்டப்படகூட்டியதாகும்.

admin
