இலங்கை தமிழர்களுக்கு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு:-செவ்வாயன்று முதல்வர் அறிவிக்கிறார்! அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேச்சு!

00:00
00:00

ஜி.கே.சேகரன்,

 கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தில் இலங்கை தமிழர்களும் உறுப்பினர்களாக சேர்க்கபடுவார்கள் - இலங்கை தமிழர்களுக்கு தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு அறிவிப்பை முதல்வர் வேலூரில் அறிவிக்க இருக்கிறார் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வேலூரில் பேச்சு

 வேலூர்மாவட்டம்,வேலூர் அப்துல்லாபுரத்தில் இலங்கை தமிழர் ஏதிலியர்களுக்கு தமிழக அரசு வீடு கட்டிதரும் திட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் வேலூரில் 2 ஆம் தேதி துவங்கி வைக்கிறார்.

  அந்த நிகழ்ச்சிக்காக அமைக்கபடும் மேடையினை சிறுபான்மை நலத்துறை அமைச்சர் மஸ்தான், மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுடன் பார்வையிட்டார்..

  முன்னதாக இலங்கை தமிழர் ஏதிலியர் முகாமில் அங்குள்ள மக்களுடன் சிறுபான்மை துறை அமைச்சர் மஸ்தான் கலந்துரையாடினார்.

  அப்போது அவர் பேசுகையில் இலங்கை தமிழ் மக்களுக்கு இந்த அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தவுள்ளது.

  குறிப்பாக அவர்களுக்கு வீடுகளை கட்டிதரும் திட்டத்தை செயல்படுத்துகிறோம் தமிழகத்தில் பணம் உள்ள நலவாரியம் கட்டுமான நலவாரியம் தான்.

 அதில் இலங்கை தமிழ் மக்கள் ஏதிலியர்கள் அனைவரையும் உறுப்பினராக சேர்க்க அரசு திட்டமிட்டு அதற்காக கோப்புகளில் கையொப்பம் இட்டுள்ளேன்.

 இதற்காக அவர்களுக்கு பயன் ஏற்படும், தமிழகத்தில் நிதி நெருக்கடி உள்ளது வருமானத்தை வீண் செலவு செய்யாமல் கருவூலகத்தில் முதல்வர் சேமிக்கிறார்.

 கடந்த ஆட்சியை போல் செய்தித்தாள்களில் கோடிக்கணக்கில் நாங்கள் விளம்பரம் செய்வது கிடையாது.

  இருந்தாலும் மகளிருக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை அறிவிப்பார். இலங்கை தமிழர்களுக்கு தனியார்த்துறையில் எத்தனை சதவிகிதம் வேலைவாய்ப்பை வழங்க வேண்டுமென தமிழக முதல்வர் வேலூரில் அறிவிக்கவுள்ளார். இதன் மூலம் உங்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று பேசினார். விழாவில் சட்டமன்ற உறுப்பினர்கள் நந்தகுமார்,கார்த்திகேயன் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் ஆகியோர் கலந்துகொண்டனர்.