ஜெப ஆலயத்தை சீர் குலைக்கும் தில்லாலங்கடிகள்! சர்ச்சை சர்ச்சை! புரோக்கர்களால் சர்ச்சை!

ஜெப ஆலயத்தை சீர் குலைக்கும் தில்லாலங்கடிகள்! சர்ச்சை சர்ச்சை! புரோக்கர்களால் சர்ச்சை!

கு.அசோக்,

 பாவமன்னிப்பு கோருவதற்காக ஆலயங்களுக்கு சென்று வருபவர்களை நாம் அறிவோம். ஆனால் ஆலயத்தின் சொத்தையும், பதவியையும் முறைகேடாக பெருவதற்கு பல இடங்களில் பிரச்சனை இருந்து வருகிறது. ஆலயத்துக்காக பக்தர்கள் வழங்கும் காணிக்கை பணம் பெரும்பாலும் வழக்கு வாய்தாவுக்காக செலவிடப்பட்டு வருகிறது.

   இதற்கு அந்தந்த ஆலயம், பேராயம் மற்றும் அதையும் தாண்டி ஆதிக்கத்தில் இருப்பவர்கள் பச்சைக்கொடி காட்டி லஞ்சம் லாவண்யத்தை பெற்றுக் கொண்டு மாண்பை சீரழித்துக் கொண்டிருக்கிறார்கள்.

 இதற்காகவே புரோக்கர்கள் பலர் இருக்கிறார்கள், அந்த வரிசையில் தற்போது குடியாத்தம் பகுதியில் ஒரு பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. 

 ஜெப ஆலயத்தை அபகரித்து தனி நபர்கள் ஆக்கிரமிக்க முயற்சி ஜெபம் செய்யவிடாமல் தாக்குதல் முயற்சி - அபகரிக்கும் நபர்கள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு

  வேலூர்மாவட்டம்,குடியாத்தம் அருகேயுள்ள வீரி செட்டிப்பள்ளி கிராமத்தில் ஜெப ஆலயம் ஒன்று செயல்பட்டு வருகிறது.  இதனை சாலமோன் என்பவர் சுமார் 10 லட்சம் செலவில் கட்டியிருக்கிறார்.

 இங்கு தொடர்ந்து ஜெபம் நடந்து வந்தது. அதில் பெரும்பாலோனோர் பங்கேற்பது வழக்கம்.

 இந்த நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த மகிமைதாஸ் மற்றும் சாமிக்கண்ணு என்பவர்கள் இருவரும் சேர்ந்து அந்த ஜெப ஆலயத்தை தங்களுக்கு சொந்தம் என்றும் மிரட்டி அபகரிக்க முயற்சியில் ஈடுபட்டு வருவதுடன் அந்த இடத்தினை சாலமோனுக்கு தெரியாமல் அந்த ஜெப ஆலயத்தை விற்கவும் ஏற்பாடு செய்தனராம்.

 அதே போல் அதனை வாங்க சிலர் முயற்சி செய்வதாகவும் கூறப்படுகிறது.

 இந்த நிலையில் ஜெபம் வீட்டில் ஜெபம் செய்து கொண்டிருந்த போது மகிமைதாஸ் சாமிக்கண்ணு இருவரும் வந்து சாலமோனை தாக்க முயன்றதுடன் கொலை மிரட்டலும் விடுத்தனராம்.

 இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் மனு அளித்துள்ளனர் தொடர்ந்து இந்த ஜெப ஆலயம் செயல்படவும் சொத்தை அபரிக்க முயலும் சாமிக்கண்ணு மற்றும் மகிமைதாஸ் மீது அரசு சட்டபடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர்.