கள் இறக்கி விற்பனை செய்யும் உரிமத்தை எங்களுக்கே வழங்க வேண்டும்! அரசுக்கு கரிக்கோல் ராஜ் கோரிக்கை!
வி.குமரேசன்,
தமிழகத்தில், பனை தொழில் விவசாயிகள் கல் இறக்கி விற்பனை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,இறக்கி விற்பனை செய்யும் உரிமத்தை எங்களுக்கே வழங்க வேண்டும் என அழகப்பபுபுறத்தில் நடைபெற்ற நாடார் மகாஜன சங்க 32 வது ஆண்டு விழாவில் பொதுச் செயலாளர் கறிக்கோல் ராஜ் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தார்.
கன்னியாகுமரி மாவட்டம், அழகப்பாபுரத்தில் நடைபெற்ற நாடார் மகாஜன சங்க கிளைச் சங்கத்தினுடைய 32 வது ஆண்டு விழா நடைபெற்றது.
இதில் நாடார் மகாஜன சங்க நிர்வாகிகளும் கேரளா நாடார் மகாஜனசங்க நிர்வாகிகளும் அதிக அளவில் கலந்து கொண்டார்கள்.
அதில்,அனைத்து மக்களுக்கும் உதவி செய்கின்ற பணியை தொடர்வோம்.
பனைத் தொழிலாளிகள், கள் இறக்கி அந்த மரத்துக்கு அடியில் வைத்துக் கொள்வதற்கு அனுமதி கொடுக்க வேண்டும்
இதுதான் ஆந்திரா அரசாங்கம் இன்றைக்கு செய்து கொண்டிருக்கிறது.
ஆந்திராவில் அந்த பனைத் தொழிலாளர்களுடைய உழைப்பு அவர்களுக்கே போய் சேருகிறது.
தமிழகத்தை பொறுத்தவரையிலும் கள்ளு கடைகளை திறந்தால் கல்லு கடைகளை ஆதிக்க சக்திகளின் கையில் அவை சென்றுவிடக்கூடாது.
என நாடார் மகாஜன சங்க நிறுவனர் கறிக்கோல் ராஜ் தெரிவித்தார். நிகழ்ச்சியில் அழகப்பபுரம் நாடார் மகாஜன சங்க தலைவர் அருள் ராஜேஷ் பி.ஆர்.ஓ கிளிமன் ரூட்ஸ் எட்வின், கேரளா நாடார் மகாஜன சங்க தலைவர் டாக்டர் கே லாரன்ஸ் உட்பட சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

அழகப்பபுரம் நாடார் மகாஜன சங்க உறுப்பினர்களின் குழந்தைகள் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் முதல் மூன்று இடங்கள் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியர்களையும் கௌரவித்து ஊக்க தொகையும் சிறப்பு கேடயமும் வழங்கி கௌரவித்தனர்.
வரவற்புரை கில்மன் புருஸ் எட்வின், செயலாளர் அறிக்கை ம.டென்னிஸ் பிரின்ஸ், செயலாளர், நாடார் மகாஜன சங்கம், அழகை கிளை.வாழ்த்துரைஎம்.விக்டர் நவாஸ், செயற்குழு உறுப்பினர்,நாடார் மகாஜன சங்கம், அழகை கிளை.
ஏ. ஜாக்குலின் ஆஷா, செயற்குழு உறுப்பினர்,நாடார் மகாஜன சங்கம், அழகை கிளை. திரு. எஸ். அசோகன், தணைத் தலைவர், நாடார் மகாஜன சங்கம். வி.எஸ்.பி. குருசாமி வெள்ளையன், தலைவர், நாடார் மகாஜன சங்கம்,மதுரை.

admin
