மாட்டு வண்டியில் இருந்து விழுந்த தேமுதிக வேட்பாளர்! சாமியாடி அருள் வாக்குச் சொன்ன பெண்!!

மாட்டு வண்டியில் இருந்து விழுந்த தேமுதிக வேட்பாளர்! சாமியாடி அருள் வாக்குச் சொன்ன பெண்!!

க.பாலகுரு,

தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ள நிலையில் தஞ்சை நாடாளுமன்ற தொகுதியின் தேமுதிக வேட்பாளர் மாட்டு வண்டியில் இருந்து தவறி கீழே விழுந்தார்.

தமிழகத்தில் முதல் கட்டமாக வரும் 19ஆம் தேதி அன்று மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 

தேர்தல்  ஆணையம் சார்பில்  அனைத்து ஆயத்தப் பணிகளும்  நடைபெற்று வரும் நேரத்தில், அரசியல் கட்சிகள் விதவிதமான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்த தொகுதியில் திமுக சார்பாக முரசொலி என்பவரும், அதிமுக கூட்டணி சார்பாக தேமுதிக வேட்பாளர் சிவனேசனும், பாஜக சார்பில் முருகானந்தம் என்பவரும், நாம் தமிழர் கட்சி சார்பில் ஹுமாயின் கபீர் என்பவர்களும் போட்டியிடுகிறார்கள். 

இந்நிலையில் இன்று தேமுதிக வேட்பாளர் சிவனேசன் பிரச்சாரத்தை மேற்கொண்டார் அப்போது அவர் மாட்டு வண்டியில் ஏறி வாக்கு சேகரித்த போது, அப்படியே சரிந்து கீழே விழுந்தார்.

நல்ல வேலையாக அருகில் இருந்தவர்கள் அவரை கைத்தாங்கலாக பிடிக்கவே வேட்பாளர் காயம் ஏதும் இன்றி தப்பித்தார். 

மேலும் அங்கு வந்த ஒரு பெண்ணுக்கு சாமி வந்து ஆடினார் அப்பொழுது  தேமுதிக வேட்பாளர் சிவனேசனுக்கு அருள் வாக்கு வழங்கினார்.

நீதான் வெற்றி பெறுவாய் என்று அந்தப் பெண் ஆடிக்கொண்டே சொன்னார் .இதனால் அங்கு வாக்கு சேகரித்தவர்கள் மத்தியில் உற்சாகம் ஏற்பட்டது.