இரட்டை இலையை காட்டி டிடிவி தினகரனை வெறுப்பேற்றிய அதிமுகவினர்! பதிலுக்கு குக்கரை காட்டியதால் பதற்றம்!
தேனி ரபீக்,
அதிமுக வேட்பாளரை வரவேற்பதற்காக மேளதாளங்களுடன் கூடியிருந்தவர்கள் மத்தியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் டிடிவி தினகரன் திடீரென வந்து விட்டார்.
இதனால் குழப்பம் அடைந்த அதிமுக தொண்டர்கள் இரட்டை இலையை உயர்த்தி காட்டி தினகரனை வெறுப்பேற்றினார்கள்.
டக்கென சுதாரித்துக் கொண்ட தினகரன் வண்டிக்குள் இருந்து குக்கர் சின்னத்தை எடுத்துக் காட்டினார்.
இதனால் அங்கு சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது.
தேனி நாடாளுமன்ற தொகுதியில் ஆண்டிப்பட்டியில் தான் இந்த கூத்து நடந்துள்ளன.
அந்தத் தொகுதியில் அதிமுக சார்பில் நாராயணசாமி என்பவரும், திமுக சார்பில் தங்கம் தமிழ்ச்செல்வமும், அ.ம.மு.க சார்பில் டிடிவி தினகரனும் போட்டியிடுகின்றனர்.
ஏற்கனவே அங்கு களம் சூடு பிடித்திருக்கின்ற நிலையில் இந்த சம்பவம் நடந்தது.

admin
