சுங்க சாவடி அமைப்பதற்கு எதிர்ப்பு!
K.ASHOK,
கே வி குப்பம் அடுத்த பில்லாந்திப்பட்டு பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சுங்க சாவடி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் --- ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் பொதுமக்கள் கைது.
வேலூர் மாவட்டம் கே. வி. குப்பம் அடுத்த பில்லாந்திப்பட்டு நெடுஞ்சாலை கட்டண சுங்கச் சாவடி அமைக்கப்பட்டு கடந்த மூன்று நாட்களாக திறப்பதற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது.
இந்த சுங்கச்சாவடி திறந்தால் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் இதனை அடுத்து திமுக சார்பில் ஒன்றிய குழு பெருந்தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் திரளான திமுகவினர் பொதுமக்கள் விவசாயிகள் என 500க்கும் மேற்பட்டோர் சுங்கன்சாவடியை முற்றுகையிட்டு மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.
பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் மற்றும் பொதுமக்களை
காவல்துறையினர் கைது செய்து அருகிலுள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்து விடுவித்தனர்.

admin
