அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ வின் உறவினர் வீட்டில் ஐ டி ரைட்! 40 லட்ச ரூபாய் பறிமுதல்! அரசியல்வாதிகள் அச்சம்!
ஜி.கே.சேகரன்,
திருப்பத்தூர் மாவட்டம்,அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே ஜி ரமேஷ். அவரது சகோதரியின் மருமகன் நவீன் குமார் வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது 40 லட்ச ரூபாய் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
நவீன் குமார் திருப்பத்தூரில் சுமி என்கின்ற பெயரில் போட்டோ ஸ்டுடியோ நடத்தி வருகிறார்.
இவரது வீடு திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி எதிரே உள்ள காந்திபேட்டை, திருநாத முதலியார் தெருவில் உள்ளது.
மேற்படி நவீன்குமார் வீட்டில் நள்ளிரவு நேரத்தில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர்.

சோதனையின் போது முக்கிய ஆவணங்கள் மற்றும் 40 லட்ச ரூபாய் பறிமுதல் பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது.
நாடாளுமன்ற தேர்தல் காரணமாக வருமானவரித் துறையினர் திருப்பத்தூர் சுற்றுலா மாளிகையில் சுமார் 10 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் முகாமிட்டு உள்ள நிலையில் இந்த சோதனையானது நடைபெற்றுள்ளது.
கைப்பற்றப்பட்ட பணம் யாருடைய பணம்? வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பதுக்கப்பட்டதா என்கிற தகவல் வெளியாகவில்லை.
சென்னை மற்றும் பல்வேறு பகுதிகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில் தற்போது திருப்பத்தூரில் நடைபெற்ற சோதனை அரசியல்வாதிகள் மத்தியில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.

admin
