மத்திய அரசை போல பென்ஷன் வழங்கு! முன்னாள் சிறைபணியாளர்கள் தீர்மானம்!

மத்திய அரசை போல பென்ஷன் வழங்கு! முன்னாள் சிறைபணியாளர்கள் தீர்மானம்!

  ஜி.கே.சேகரன்,

  மத்திய அரசில் உள்ளதை போல் 20 ஆண்டுகள் பணி முடித்த சிறை பணியாளர்களுக்கு முழு பென்ஷன் தொகையை அரசு வழங்க வேண்டுமென  ஓய்வு பெற்ற 4 மாவட்டங்களை சேர்ந்த சிறைப்பணியாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் இயற்றப்பட்டது.

 வேலூர்மாவட்டம், தொரப்பாடியில், வேலூர் மண்டல ஓய்வு பெற்ற சிறைபணியாளர்கள் சங்கத்தின் கூட்டம் தலைவர் உபயதுல்லா தலைமையில் நடைபெற்றது. இதில் செயலாளர் பழனி, மாநில தலைவர் சின்னப்பு, செயலாளர் கருத்தப்பாண்டி, வேலூர் சிறை கண்காணிப்பாளர் அப்துல் ரகுமான் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 இதில் வேலூர்,  ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்த ஓய்வு பெற்ற சிறை பணியாளர்கள் பங்கேற்றனர்.

  ஓய்வு பெற்ற சிறை பணியாளர்கள் நலனை கருதி ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு அரங்கம் ஒன்றை தமிழக அரசு கட்டித்தர வேண்டும், ஊதிய முரண்பாடுகளை அரசு களைய வேண்டும், மத்திய அரசில் உள்ளதை போல் 20 ஆண்டுகள் பணி முடித்த அனைத்து சிறை பணியாளர்களுக்கும் முழு பென்ஷன் தொகையை வழங்க வேண்டும், மத்திய அரசுக்கு இணையாக மாதாந்திர மருத்துவபடி ரூ.1000 ஆக வழங்கவும், சிறைவாசிகள் தப்பிய வழக்கில் தண்டிக்கப்பட்ட பணியாளர்களுக்கு கோப்புகளை விரைவாக தீர்வு கண்டு ஓய்வூதியம் வழங்க வேண்டும், ஓய்வு பெற்றவர்கள் இறந்தால் முழு ஓய்வூதியத்தை 10 ஆண்டுகளாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பதை உள்ளிட்ட பல தீர்மானங்கள் இதில் நிறைவேற்றப்பட்டன.