பாலாற்றில் கலக்கப்படும் இரசாயனகழிவு நீர்! வேடிக்கை பார்க்கும் மாசுகட்டுபாட்டு அதிகாரிகள்!

பாலாற்றில் கலக்கப்படும் இரசாயனகழிவு நீர்! வேடிக்கை பார்க்கும் மாசுகட்டுபாட்டு அதிகாரிகள்!

ஜி.கே.சேகரன்,

  ஆம்பூர் அருகே பாலாற்றில் கலக்கும் தோல் கழிவு நீரால் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள் துர்நாற்றம் வீசி நோய் தொற்று பரவுவதற்கு முன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை.

  திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் செயல்பட்டு வரும் தோல் தொழிற்சாலைகளில் இருந்து இரசாயன கழிவு நீர் பாலாற்றில் திறந்து விடப்படுகிறது. அடிக்கடி இப்படி செயல்படுவதால், இந்நிலையில் தற்போது பாலாற்றில் ஆயிரக்கணக்கான  மீன்கள் செத்து மிதக்கின்றன.

   இதுகுறித்து ஏற்கனவே பலமுறை புகார் அளித்தும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் தோல் தொழிற்சாலைகளுக்கு  துணை போவதாகவும் இதனால் வருங்கால சந்ததியினருக்கு கிடைக்க வேண்டிய வளங்கள் அனைத்தும் நாசமாவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.