அதிமுக வுக்காக பாடுபடு எஸ்.டி.பி.ஐ கட்சி முடிவு!

அதிமுக வுக்காக பாடுபடு எஸ்.டி.பி.ஐ கட்சி முடிவு!

 கு.அசோக்,

 ஆற்காடு தனியார் திருமண மண்டபத்தில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் அரசியல் பயிலரங்கம் குறித்து ஆலோசனைக் கூட்டம் எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பில் நடைபெற்றது.

 இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு கலவை செல்லும் சாலையில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் எஸ்.டி.பி.ஐகட்சியின் சார்பில் அரசியல் பயிலரங்கம் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைவர் கௌவுஸ் தலைமையில் நடைப்பெற்றது. இதில் மாவட்ட பொதுச்செயலாளர் இமாம்கபுர் மற்றும் மாவட்ட செயலாளர் ஆற்காடு சையத் கரீம், தொகுதி தலைவர் முபாரக் தொகுதி செயலாளர் இமாம், இலியாஸ் மாவட்ட இளைஞரணி ஒருங்கிணைப்பாளர் பயாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த ஆலோசனை கூட்டத்திற்கு எஸ்டிபி.ஐ கட்சியின் மாநில பொருளாளர் அமீர் ஹம்சா மாநில செயற்குழு உறுப்பினர் ரவிச்சந்திரன் மற்றும் மண்டல தலைவர் பயாஸ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு  வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி இருப்பதால் அனைத்து கட்சி நிர்வாகிகளும் ஒற்றுமையாக இணைந்து செயல்பட வேண்டுமென கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனை கூட்டத்தின் மூலமாக தெரிவிக்கப்பட்டது.