பாமக வேட்பாளரின் காரை பறிக்க முயன்ற போலீசார்! கடும் வாக்கவாதம் ஏற்பட்ட பின் விடுவிப்பு!
ம.பா.கெஜராஜ்,
சேலம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் அண்ணாதுரை பாமக கட்சியை சேர்ந்தவர்.
இவரது பெயர்தான் கடந்த இரண்டு நாட்களாக செய்திகளில் இடம் பிடித்து வருகின்றன.
முதலாவதாக வேட்பாளர் அறிமுக கூட்டம் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
அப்போது அந்தக் கூட்டத்தில் வேட்பாளர் அண்ணாதுரை பேசும்போது அரங்கில் இருந்த அனைத்து இருக்கைகளும் காலியாக இருந்தது.
வேறு வழியின்றி அண்ணாதுரை காலி இருக்கைகளை பார்த்து வீர ஆவேசமாக பேசிவிட்டு நகர்ந்தார்.

அடுத்ததாக தற்போது வேட்பு மனு பரிசீலனைக்காக சேலம் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து திரும்பிச் சென்ற அண்ணா துரையின் காரை போலீசார் இடைமறித்து பறிமுதல் செய்ய முற்பட்டனர்.
தேர்தல் ஆணையம் வழங்கிய அனுமதி சீட்டு காரில் ஒட்டப்படாததால் பறிமுதல் நடவடிக்கை என்று போலீசார் கூறிய நிலையில், கீழே இறங்கி வந்து போலீசாரிடம் கடுமையான வாக்குவாதம் செய்தார் வேட்பாளர் அண்ணாதுரை.
அதன் பிறகு ஒரு வழியாக போலீசார் அவரதுகாரை அனுப்பி வைத்தனர்.

admin
