அதிமுக திமுக வேட்பாளர்களின் மனு நிறுத்திவைப்பு! வடசென்னையில் டென்ஷன்!
ம.பா.கெஜராஜ்,
வடசென்னை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக, அதிமுக மற்றும் பாஜக வேட்பாளர்கள் ஒரே தினத்தில் மனு தாக்கல் செய்த போது பெரும் குழப்பம் ஏற்பட்டது.
அன்றைய தினத்தில் முக்கிய செய்தியாக இது இடம் பிடித்திருந்த நிலையில் தற்போது மீண்டும் அங்கு குழப்பம் நிலவுகிறது.
அந்த தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வழக்கறிஞர் பால் கனகராஜ் திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமியின் மனுவை ஏற்க கூடாது என்று ஆட்சேபனை தெரிவித்திருக்கிறார்.
அதற்குக் காரணம் திமுக வேட்பாளர் தாக்கல் செய்துள்ள வேட்பு மனுவுடன் இணைக்கப்பட்டிருக்கும் பிரமாண வாக்கு மூலத்தில் சுரேஷ் என்கின்ற வழக்கறிஞர் நோட்டரி கையெழுத்திட்டு இருக்கிறார்.

ஆனால் அவரது நோட்டரிக்கான லைசென்ஸ் கடந்த 06.02.2024 அன்று காலாவதி ஆகிவிட்டது.
ஆகவே கலாநிதி வீராசாமி தாக்கல் செய்துள்ள மனு நிராகரிக்கப்படக் கூடியதாகும் என்று பால் கனகராஜ் தனது ஆட்சேபனை மனுவில் தெரிவித்து இருக்கிறார்.
இதன் காரணமாக திமுக வேட்பாளரின் மனு நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது.
அதேபோல் அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ தாக்கல் செய்திருந்த மனுவை நிறுத்தி வைக்குமாறு திமுக வேட்பாளரும் இரண்டு மூன்று காரணங்களை சுட்டிக்காட்டி ஆட்சேபனை தெரிவித்துள்ளார்.
ஆகவே வடசென்னை நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக மற்றும் திமுக வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது.
அதேபோல் சேலம் திமுக வேட்பாளர் செல்வகணபதியின் மனுவும் நிறுத்திவைப்பு.
அவருக்கு சேலம் வடக்கு மற்றும் மேற்கு ஆகிய இரண்டு பகுதிகளிலும் வாக்கு இருப்பதால் அதை அவர் மூடி மறைத்து விட்டார் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் மனு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.
இணைப்புச் செய்தி. பிற்பகலில் வடசென்னை அதிமுக மற்றும் திமுக வேட்பாளர்களின் மனுக்கள் தேர்தல் ஆணையத்தால் ஏற்கப்பட்டது.

admin
