ஆந்திர கோழி பண்ணைக்கு சப்ளை ஆகும் தமிழக ரேஷன் அரிசி!
கு.அசோக்,
நெமிலி அருகே வீடுகளில் இருந்து ஆந்திர மாநிலத்துக்கு கடத்த முயன்ற 1000 கிலோ-1 டன் ரேஷன் அரிசி மற்றும் வேனை பறக்கும் படை தனி வட்டாட்சியர் பறிமுதல் செய்தார்.
இராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி தாலுகாக்கு உட்பட்ட பனப்பாக்கம் அடுத்த மேலப்புலம் புதூர் கிராமத்தில் சிலர் எடை போட்டு அரிசி மூட்டைகளை வீட்டுக்கு முன்பாக கட்டி வைத்து விடுகின்றனர். அந்த வழியாக அதிகாலையில் வரும் வேன் வீடுகளுக்கு முன்பாக வைக்கப்பட்டுள்ள அரிசி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு ஆந்திர மாநிலத்திற்கு செல்கிறது என்று பறக்கும்படை தனி வட்டாட்சியர் ஆனந்தனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் அதிகாலை நேரத்தில் பறக்கும் படை தனி வட்டாட்சியர் ஆனந்தன் மற்றும் வருவாய்த் துறையினர் வந்தபோது வேனில் இருந்த டிரைவர் மற்றும் உதவியாளர் அங்கிருந்து தப்பி ஓடினர். வேனை பரிசோதனை செய்ததில் 30 மூட்டைகளில் ஆயிரம் கிலோ-1 டன் ரேஷன் இருந்தது தெரிய வந்தது.
இந்த அரிசி மூட்டைகள் ஆந்திர மாநிலத்திற்கு கடத்தி செல்வதும் அதிகாரிகள் விசாரணையில் தெரியவந்தது . வேன் மற்றும் 1000 கிலோ - 1டன் அரிசி பறக்கும் படை தனி வட்டாட்சியர் பறிமுதல் செய்தார்.
தமிழக ரேஷன் அரிசி ஆந்திராவுக்கு ஏன் கடத்தப்படுகிறது என்று விசாரித்த போது, அங்குள்ள கோழி பண்ணைகளுக்கு தீவனமாக பயன்படுத்தப்படுகிறோம் என்கிறார்கள் அவர்கள்.
அவ்வளவு தரமாகவா உள்ளது?

admin
