பறந்து பறந்து பணியாற்றும் திருவாரூர் பறக்கும் படை!
க.பாலகுரு,
திருவாரூர் அருகே ஆவணமின்றி எடுத்துச்செல்லப்பட்ட 1 லட்சத்து 76 ஆயிரத்து 500 ரூபாய் பணம் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து நடவடிக்கை.
வரும் ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது இதன் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் மறையினர் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்
இந்த நிலையில் திருவாரூர் அருகே வேப்பத்தாங்குடி கிராமத்தில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் விஸ்வநாதன் , சிறப்பு உதவி காவல்ஆய்வாளர் உதயகுமார் ,
தலைமை காவலர் சரவணகுமார் உட்பட வாகன சோதனையின் போது வலிவலம் பகுதியைச் சேர்ந்த எலக்ட்ரிக்கல் கடை உரிமையாளர் ரஜினி என்பவர் காரில் 1 லட்சத்து 76 ஆயிரத்து 500 ரூபாய் ரொக்கபணம் ஆவணமின்றி எடுத்துச்சென்றது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து பணத்தை
பறிமுதல் செய்து திருவாரூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் உதவிதேர்தல் நடத்தும் அலுவலர் வசம் ஒப்படைத்தனர் ,
இதனைத்தொடர்ந்து வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் பத்மா, தேர்தல் விதிமுறைகள் தடுப்பு பொருட்கள் ஒருங்கிணைப்பு அலுவலர் பாரதி ரொக்கபணம் சரிபார்க்கப்பட்ட பின்னர் திருவாரூர் மாவட்டஆட்சியர் அலுவலக அருகில் உள்ள சார்கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது .

admin
