. இராணிப்பேட்டையில் காட்டன் சூதாட்டம்! தடுக்க தவறிய காவல் துறையை கண்டித்து பாமக ஆர்பாட்டம்!
கு.அசோக்,
இராணிப்பேட்டையில், தோல் தொழிற்சாலை கழிவுகளால் பாலாற்றில் நீர் மாசடைந்து மக்கள் அதிக அளவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை தடுக்க தவறிய மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும் - ராணிப்பேட்டை மாவட்டத்தில் காட்டான் சூதாட்டம் கஞ்சாவால் மாணவர்கள் அதிக அளவில் பாதிக்கபடுவதை தடுக்க தவறிய காவல்துறைக்கு கண்டனம் தெரிவித்தும் ஆற்காட்டில் நடந்த பாமக மாணவர் சங்க பொதுக்குழுவில் தீர்மானம்.
இராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காட்டில் ஜன சங்க கட்டிடத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாணவர் சங்க பொதுகுழு கூட்டம் மாவட்டத்தலைவர் குமரன் தலைமையில் நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாணவர் சங்க மாநில செயலாளர் ஜானகிராமன் கலந்துகொண்டார்.
அப்போது பாமக வெற்றிக்காக மாணவர்கள் கொள்கைகளை கிராமம் கிராமமாக கொண்டு சென்று சேர்ப்பது குறித்தும், மாணவர்கள் நலனில் பாமகவின் முக்கிய பங்களிப்பு குறித்தும், அனைத்து மாணவர்களும் அறிந்துகொள்ளும் வகையில் செயல்படுவது குறித்தும் விளக்கி பேசினார். இக்கூட்டத்தில் பாமக மாவட்ட செயலாளர் சரவணன், மாவட்ட அமைப்பு செயலாளர் அ.,ம.கிருஷ்ணன் உள்ளிட்ட திரளான பாமகவினர் மற்றும் மாணவர் சங்கத்தினர் பங்கேற்றனர்.
இந்த சங்க பொது குழுவில் ராணிப்பேட்டையில், தோல் தொழிற்சாலை கழிவுகளால் பாலாற்றில் நீர் மாசடைந்து மக்கள் அதிக அளவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் இதனை தடுக்க தவறிய மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும் இந்த நிலை தொடர்ந்தால் மாணவர் சங்கம் சார்பில் பெரிய அளவில் ஆர்பாட்டம் நடத்துவது எனவும் காட்டான் சூதாட்டம் கஞ்சா ஆகியவைகளால் இராணிப்பேட்டை மாவட்டத்தில் மாணவர்கள் அதிக அளவில் பாதிக்கபடுகின்றனர். கஞ்சா, காட்டான் சூதாட்டத்தை தடுக்க தவறிய காவல்துறையை கண்டித்தும் ஆற்காடு தேசிய நெடுஞ்சாலை சந்திப்பில் மாணவ,மாணவிகள் நலனை கருத்தில் கொண்டு மேம்பாலம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

admin
