2022ம் ஆண்டை முதலில் வரவேற்ற நியூசிலாந்து!

பா.ரமேஷ் ஆனந்தராஜ்,
இந்தியாவில் இன்று நள்ளிரவு 12 மணிக்கு 2022ஆம் ஆண்டு பிறக்க உள்ள நிலையில், நியூசிலாந்தில் இந்திய நேரப்படி இன்று மாலையிலேயே புத்தாண்டு பிறந்துள்ளது. புத்தாண்டை முதலில் வரவேற்ற நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில், உள்ளூர் நேரப்படி டிசம்பர் 31 நள்ளிரவு 12 மணி ஆனதும் லேசர் விளக்குள் ஒளிர, வாண வேடிக்கைகளுடன் கொண்டாட்டம் களைகட்டியது. நகரமே வண்ணமயமாக காட்சியளித்தது.
உலகின் மறுபக்கமான பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள நியூசிலாந்து நாடு உலகில் சூரிய உதயத்தை சந்திக்கும் முதல் நாடாக உள்ளது. இதன் அடிப்படையில் ஆங்கில புத்தாண்டு பிறப்பும் அமைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.