தடுப்பணையில் நீராடியவர்களை விரட்டியடித்த டிஎஸ்பி!

தடுப்பணையில் நீராடியவர்களை விரட்டியடித்த டிஎஸ்பி!

ஜி.கே.சேகரன்

வாணியம்பாடி அருகே  கனமழையால்  தடுப்பணை நிரம்பி உபரி நீர் வெளியேறுகிறது. ஆனால் ஆபத்தை உணராமல்  தடுப்பணையில் குளித்து கொண்டிருந்த பொதுமக்கள் காவல் துணை கண்காணிப்பாளர் நேரில் சென்று அவர்களை எச்சரித்து அனுப்பினார்.

   ஃபெஞ்சால் புயல் காரணமாக திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 3 நாட்களாக மழை பெய்தது.  மேலும் தமிழக ஆந்திர எல்லையில் உள்ள வனப்பகுதிகளிலும் பாலாறு நீர்ப்பிடிப்பு பகுதியில்  கனமழை பெய்து வருகிறது.

    தமிழக ஆந்திர எல்லையான பெரும்பள்ளம் என்ற இடத்தில் பாலாற்றில் குறுக்கே 12 உயர தடுப்பணை முழுவதும் நிரம்பி தமிழக பாலாற்றில் தண்ணீர் வெளியேறி வருகிறது.

 இந்த நிலையில் தமிழகம் மற்றும் ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த பொதுமக்கள் அந்த தடுப்பணை அருகே உள்ள கனக நாச்சியம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தி பின்னர் ஆபத்தை உணராமல் குளித்துக் கொண்டிருந்தனர்.

   அந்த  தடுப்பணையில் நீர் வரத்து அதிகரித்து வரும் போதெல்லாம் அங்கு குளிக்க செல்லும் பொதுமக்கள் நேரில் மூழ்கி அடிக்கடி உயிரிழ்ப்பு ஏற்படுவது பல முறை ஏற்பட்டிருக்கிறாது.

 அப்படியிருக்க, வாணியம்பாடி காவல் துணை கண்காணிப்பாளர் விஜயகுமார் மற்றும் திம்மாம்பேட்டை போலீசார் அப்பகுதியில் ரோந்து பணிக்காக சென்றனர்.அப்போது ஆபத்தான நிலையில் பொதுமக்கள் தடுப்பணை நீரில் குளித்து கொண்டிருந்தது பார்த்து அவர்களை அழைத்து இங்கு அடிக்கடி உயிரிழப்பு ஏற்படுகிறது.இங்கு யாரும் குளிக்க கூடாது என்று எச்சரித்து அனுப்பி வைத்தார்.