கலெக்டர் ஆபிசில் வெடித்து எரிந்த மின்வயர்கள்! ஓட்டம் பிடித்த மக்கள்!
கு.அசோக்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பி பிளாக்கில் மின்சார ஒயர்கள் வெடித்து சிதறியதால் மக்கள் அலறியடித்து ஓட்டம்.
வேலூர்மாவட்டம்,வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் பி பிளாக்கில் மின்சாரம் செல்லும் கேபிள் ஒயர் திடீரென தீப்பிடித்து எரிய துவங்கியது. அப்போது கேபிள் பட்டாசு போல வெடித்து எரிந்து சிதறியது.
இதனால் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த மக்கள் அலறியடித்துகொண்டு ஓட்டம் பிடித்தனர் பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் மின்சாரம் முழுமையாக துண்டிக்கப்பட்டு தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டனர்.
மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் பிரதான மின் ஒயர் தீப்பற்றி எரிந்து வெடித்து சிதறியதால் பதற்றமும் பரபரப்பும் காணப்பட்டது.

admin
