ஏம்பா லேட்டு? இது காட்பாடி ரிஜிஸ்த்தர் அலுவலக மேட்டர்!
கு.அசோக்,
காட்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தில் 12 மணி மேலாகியும் அலுவலக ஊழியர்கள் யாரும் வராததால் அலுவலகத்தை நாடி வந்தவர்கள் அவதிப்பட்டனர்.
வேலூர் மாவட்டம் காட்பாடி சார்பதிவாளர் அலுவலகம் சித்தூர் கடலூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. இங்கு நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்டோர் பத்திரப்பதிவு செய்து வருகின்றனர்.
தற்சமயம் மூன்று நாட்களாக மழை பெய்து வரும் நிலையிலும் பொதுமக்கள் பத்திரப்பதிவு அலுவலகத்தில் வந்து பத்திரப்பதிவு செய்ய வந்த வண்ணம் இருந்த நிலையில், நேற்று காலை 10 மணி முதல் அலுவலகம் துவங்கிய நிலையில் ஒரு சில ஊழியர்கள் மட்டுமே வந்தனர்.
ஆனால் பத்திரப்பதிவு செய்வதற்கு சார் பதிவாளர் வராத நிலையில் பொதுமக்கள் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
உடனடியாக மாவட்ட பதிவாளர் அலுவலகத்துக்கு தகவல் அளித்தப்பின்னர் வரிசைகட்டி வந்தார்கள் பதிவாளர்கள்.
இந்நிலையில் ஏம்பா லேட்டு என்று விசாரணை நடத்தப்படவில்லையாம்.

admin
