வேலூர் மாவட்டத்தில் கால்வாய்...கட்டிடம் கட்டியதற்கு மத்திய அரசு 25 கோடி பாக்கி! எம்.பி.கதிர் ஆனந்த் பேட்டி!
ஜி.சேகரன்,
மத்திய அரசு 100 நாள் தொகைக்கான நிதியை பாதியாக குறைத்ததால் மக்கள் பாதிப்பு என எம்பி கதிர் ஆனந்த் பேட்டியி ஒன்றில் சொன்னார்.
வேலூர்மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண் காணிப்பு குழுக்கூட்டம் குழு தலைவர் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினருமான கதிர் ஆனந்த் தலைமையில் நடைபெற்றது. வேலூர் மாவட்ட ஆட்சியர் வே.இரா.சுப்புலெட்சுமி மற்றும் திட்ட இயக்குநர் ஆர்த்தி,சட்டமன்ற உறுப்பினர் அமுலு, அனைத்துத்துறை அலுவலர்களும் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
இதில் மத்திய அரசின் வேளாண் திட்ட பணிகள் கிராமப்புறங்களில் கொண்டு சேர்ப்பது, மக்களுக்கு தேவையான சிறு குறுதொழிற்கடன் களை அதிக அளவில் வழங்கி கிராமப்புற இளைஞர்களை வேலைவாய்ப்பை பெற செய்வது உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
பின்னர் நாகநதி கிராமத்தில் எருது விடும் திருவிழாவை காண சென்ற நரிக்குறவர் சமுதாய இளைஞர் ராம்கி மாடு குத்தியதில் பலியானார் இதனை அறிந்த தமிழக முதல்வர் ஸ்டாலின் ரூ.3லட்சம் நிவாரண நிதி அறிவித்ததையும் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் இறந்த ராம்கி மனைவியிடம் வழங்கினார்.
பின்னர் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு கண்காணிப்பு குழு தலைவருமான கதிர் ஆனந்த் செய்தியாளர்களிடம் கூறுகையில், மாவட்டகண்காணிப்பு குழு கூட்டத்தை ஆட்சியர் முன்னிலையில் கூட்டப்பட்டது. என் தலைமையில் கூட்டம் நடந்தது.
45 துறையை சேர்ந்த அரசு அதிகாரிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், மேயா,¢ கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனா.¢ இதில் 45 துறை மூலம் என்ன பணிகள் நடந்தது என கேள்வி கேட்டு ஆலோசனை வழங்கினோம்.
விவசாயிகள் மாணியம் காப்பீடுகள் ஆகியவைகள் விவசாய மக்களுக்கு கொண்டு சென்று சேர்க்க வேண்டும், எல்லாதுறை திட்டங்களுமே மக்களிடம் கடைகோடி கிராம மக்களுக்கும் இதனை கொண்டு சேர்க்க வேண்டும், இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்தலைவர்கள் மூலம் இதனை கொண்டு சேர்க்க «ண்டும் என்பதே இதன் முக்கிய அம்சம்.
புத்தக கையேடுகள் மூலம் திட்டங்களை மக்களுக்கு கொண்டு சேர்க்க உள்ளோம். மேலும் பழச்சாறு கம்பெனி இம்மாவட்டத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். 8 ஆம் வகுப்பு படித்திருந்தாலே மத்திய அரசு மூலம் 50 லட்சம் வரையில் கடன் பெறும் திட்டம் உள்ளது. ஆனால் இம்மாவட்டத்தில் உள்ள 400 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். அதற்கு காரணம் இத்திட்டம் கடைகோடி மக்களுக்கு கொண்டு சேர்க்கப்படவில்லை.
அதுமட்டுமின்றி அங்கன்வாடிகள் தனியார் கட்டிடங்களில் இயங்குவதை மாற்றி சொந்த கட்டிடம் கட்ட பணம் ஒதுக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். அங்கன்வாடி காலி பணியிடங்களை நிரப்பவும் சொல்லியுள்ளனர். சத்துணவு திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் காலை உணவை தமிழக முதல்வர் அறிமுகப்படுத்தியது 100 சதவிகிதம் வெற்றியடைந்து அற்புதமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
100 நாள் வேலை திட்டம் மத்திய அரசு பங்களிப்புடன் நடக்கிறது, அந்த நிதியை மத்திய அரசு பாதியாக குறைத்து 15 ஆவது நிதிக்குழுவுக்கு வழங்கியுள்ளனர். இதனால் மக்களுக்கு பாதிப்பு அபாயமும் வந்துள்ளது. 100 நாள் வேலை மூலம் கட்டிடம் கால்வாய்களை கட்டும் திட்டமும் உள்ளது. 100 நாளில் கூலி வழங்கப்படுகிறது, ஆனால் பொருட்கள் வாங்கிய செலவீன தொகையாக இம்மாவட்டத்திற்கு மத்திய அரசு வழங்க வேண்டிய 25 கோடி பாக்கியாக உள்ளது.
ஒவ்வொரு வார்டுகளில் இ-சேவை மையம் திறக்க வேண்டும், விவசாயத்தை பெருக்குவோம் இளைஞர்களின் வேலைவாய்ப்பை பெருக்குவோம். பிரதமர் வீடு வழங்கும் திட்டம் யாருக்கு சென்று சேர்கிறது என மக்களுக்கு தெரியவில்லை. பேர்ணாம்பட்டில் முழுமையாக பிரதமர் வீடுகள் 190 வீடுகள் கட்டப்பட்டுள்ளது. ஆனால் அவ்வளவாக விண்ணப்பங்கள் வரவில்லை. ஆக்கிரமிப்புகளில் இருந்து அகற்றப்பட்ட மக்களுக்கு இந்த வீடுகளை வழங்கவும் திட்டமிட்டுள்ளோம்.
ஜல் சக்தி திட்டம் இம்மாவட்டத்தில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் மத்திய அரசு பொருட்கள் வாங்கியதற்காக தரும் தொகையின் வித்தியாசம் அதிகமாக உள்ளது தொகை கட்டுபடியாகவில்லை. இந்த இடர்பாடுகளை எல்லாம் மத்திய அரசு நிவர்த்தி செய்ய வேண்டும் என்று சொன்னார்.

admin
