தேர்தலுக்கு பின்னர் விளையாட்டு மைதானம் அமைத்து கொடுப்பேன்! ஏ.சி.சண்முகம் வாக்குறுதி!
ஜி.கே.சேகரன்,
வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தலுக்கு பின்னர் விளையாட்டு மைதானம் அமைத்து தரப்படும் - 10 ஆயிரம் பேருக்கு மேலாக வேலைவாய்ப்பை பெற்றுதந்துள்ளோம் - தொரப்பாடியில் கிரிக்கெட் போட்டியில் வென்றவர்களுக்கு கோப்பைகள் ரொக்கபரிசுகளை வழங்கி ஏ.சி.சண்முகம் பேச்சு.
வேலூர்மாவட்டம், தொரப்பாடியில் உள்ள அழகாம்பாள் திருமண மண்டபத்தில் புதிய நீதிக்கட்சி மற்றும் ஏ,.சி.எஸ் மருத்துவக்கல்லூரி சார்பில் அனைக்கட்டு தொகுதியில் நடத்தப்பட்ட கிரிக்கெட் போட்டிகளில் வென்றவர்களுக்கு ரொக்கப்பரிசுகள் மற்றும் கிரிக்கெட் கிட்டுகள் வழங்கும் விழர் ஏ.சி.சண்முகம் தலைமையில் நடைபெற்றது. இதில் ஏ.சி.எஸ் குழும தலைவர் அருண்குமார், செயலாளர் ரவிக்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர். கிரிக்கெட் கிட்டுகள் மற்றும் ரொக்கபரிசுகள் சான்றுகள் கோப்பைகளை ஏ.சி.சண்முகம் வழங்கினார்.
முன்னதாக பேர்ணாம்பட்டு மற்றும் தொரப்பாடி பகுதிகளிலும் இலவச மருத்துவ முகாமானது நடந்தது
பின்னர் விழாவில் ஏ.சி சண்முகம் பேசுகையில் இலவச மருத்துவ முகாமால் மக்கள் அதிகமானோர் பயனடைந்துள்ளன. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்று தந்துள்ளோம், மேலும் வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் இளைஞர்களுக்காக விளையாட்டு மைதானங்களை தேர்தலுக்கு பின்னர் அமைத்து தருவேன் என பேசினார்.

admin
