10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எழுதுகோல் வழங்கிய சக்தியம்மா!

ஜி.கே.சேகரன்,
ஸ்ரீபுரம் நாராயணி தங்க கோவிலில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் பொது தேர்வில் நல்ல மதிப்பெண்களை பெற வேண்டி எழுதுகோல்களை சரஸ்வதி யாகத்தில் வைத்து பூஜைகள் செய்து மாணவர்களுக்கு சக்தியம்மா வழங்கினார்.
வேலூர் மாவட்டம், ஸ்ரீபுரத்தில் உள்ள நாராயணி பீடத்தில்10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு எழுதுகோல் வழங்கும் விழா யாகம் நடந்தது.
இதில் தங்ககோவில் நிறுவனர் சக்தியம்மா பூஜைகளை செய்து புனிதநீரை எழுதுகோல்களின் மீது ஊற்றினார். பின்னர் வேலூர் தங்க கோவில் நிறுவனர் சக்தி அம்மா தலைமையில் ஸ்ரீ சூக்தயாகம் எனப்படும் சரஸ்வதி யாகம் நடத்தப்பட்டது.
அப்போது, கலசத்தில் புனித நீரை வைத்து வேதமந்திரங்கள் முழங்க யாகத்திற்கு பின்னர் புனித நீர் எழுதுகோல்களின் மீது ஊற்றி பூஜைகள் செய்யப்பட்டு மாணவர்களும் மாணவிகளும் அவை வழங்கப்பட்டது.
இவ்விழாவில் மத்திய தொழிற்பாதுகாப்படை தென் மண்டல துணை தலைவர் பொன்னி மற்றும் வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி உள்ளிட்டோரும் திரளான மாணவ,மாணவிகளும் பெற்றோர்களும் கலந்துகொண்டனர்.
ஆண்டு தோறும் இந்த நிகழ்வு நடைபெற்று வருவது நினைவு கூறத்தக்கதாகும்.