போதை ஆசாமியின் ஜிபே பணம் கொள்ளை!

போதை ஆசாமியின் ஜிபே பணம் கொள்ளை!

கு.அசோக்,

    டாஸ்மாக் கடையை ஒட்டி மதுகுடித்து விட்டு உறங்கிய கூலி தொழிலாளி - நோட்டமிட்டு வம்பிழுத்து மாத சம்பளம் 10,000 ரூபாயை ரத்தம் சொட்ட தாக்கிவிட்டு பிடுங்கி சென்ற மர்ம கும்பல்

  இராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை(54). வாலாஜா வி.சி.மோட்டூர் பகுதியில் தங்கி தனியார் கேஸ் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவர், நேற்று தனது கம்பெனியில் மாத ஊதியம் பெற்றுக் கொண்டு மது அருந்துவதற்காக சென்றுள்ளார்.

   வாலாஜா மேல்புதுப்பேட்டை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் தனியாக அமர்ந்து மது அருந்தியுள்ளார். பின்பு அங்கேயே படுத்த போது அதனை நோட்டமிட்ட சிலர், அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

   இந்த தகராறில், அண்ணாமலையை ரத்தம் சொட்ட சொட்ட கடுமையாக தாக்கிய அந்த கும்பல் அவரிடம் இருந்து மாத சம்பள பணமான 10,000 ரூபாயை பறித்து சென்றுள்ளது.

   இது குறித்து காயமடைந்த அண்ணாமலை, வாலாஜாபேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதே டாஸ்மாக் கடையில் கடந்த வாரம் தனியார் தொழிற்சாலை ஊழியரை வழிமறித்து தாக்கி, ஆடைகளைப் பிடுங்கிக் கொண்டு கையில் இருந்த பணம் மற்றும் ஜி.பே.வில் இருந்த பணத்தை வழிப்பறி செய்துள்ளனர்.

   தொடர்ச்சியாக திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதால் அந்த பகுதியில் பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.