டார்லிங் ஷோரூமில் வாங்கிய குளிர்சாதனப்பெட்டி வெடித்து கருகியது!

  ஜி.கே.சேகரன்,

  டார்லிங் ஷோரூமில் வாங்கிய குளிர்சாதனப்பெட்டி 8 நாட்களில்  வெடித்து விட்டதாக ஷோரூம் முன்பு குளிர்சாதன பெட்டியை வீசிய நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

  திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த முத்தாகவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த சரவணன் மகன் ரவிக்குமார் (28)  செங்கல் சூளையில் வேலை செய்து வருகிறார்.

   இவர் கடந்த 29.6.25 ஆம் தேதி 20 ஆயிரம் மதிப்பில் குளிர்சாதனப் பெட்டி வாங்கி உள்ளார்.இந்த நிலையில் 8 நாட்கள் மட்டுமே இந்த குளிர்சாதனப்பெட்டி சரியாக இயங்கியதாகவும் பின்னர் இந்த மாதம் ஏழாம் தேதி திடீரென அதிக சத்தத்துடன் வெடித்ததாகவும் கூறப்படுகிறது.

   இதுகுறித்து  ஷோரூம் ஊழியர்களிடம் பலமுறை சரி செய்து தர கோரி சரவணன் கோரிக்கை ஆனால் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது.

  இதனால் ஆத்திரமடைந்த சரவணன் தான் டார்லிங்கில் வாங்கிய குளிர்சாதன பெட்டியை ஷோரூம் முன்பு வீசி பரபரப்பை ஏற்படுத்தினார்.

  மேலும் இதுகுறித்து ஷோரூம் மேனேஜர் சங்கரிடம் விசாரணை மேற்கொண்டதில் சரவணன் குளிர்சாதன பெட்டிக்கு தேவையான கரண்ட் சப்ளை கிடைக்கவில்லை மேலும் அவர் பக்கத்து வீட்டில் இருந்து மின்சாரம் இழுத்து பயன்படுத்தி வந்ததன் காரணமாக இந்த குளிர்சாதனப்பெட்டி வெடித்துள்ளது.

  மேலும் சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வரும் பொழுது இவர் ஷோரூம் முன்பு பிரிட்ஜியை வீசி  விட்டார் என ஷோரூம் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது.

  பிரச்சனை வெடித்தபின்னர் இப்படி சொல்லியிருப்பதை நம்புவதா வேண்டாமா?