மண்டே பெட்டிஷனில் புகார் கொடுப்பது வேஸ்ட்! தீக்குளிக்க முயன்ற  முதியவர்!

மண்டே பெட்டிஷனில் புகார் கொடுப்பது வேஸ்ட்! தீக்குளிக்க முயன்ற  முதியவர்!

மண்டே பெட்டிஷனில் புகார் கொடுப்பது வேஸ்ட்! தீக்குளிக்க முயன்ற  முதியவர்
குஅசோக்,
வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில்புன் மக்கள் குறைதீர்வு முகாமில் முதியவர் தீகுளிக்கL  முயற்சி காவல்துறையினர் விசாரணை.

  வேலூர்மாவட்டம்,அனைக்கட்டு அருகே  புலிமேடு கிராமத்தை சேர்ந்தவர் காசி (73).

  இவருக்கும் பக்கத்து நிலத்தை சேர்ந்த நடராஜன் என் பவருக்கும் நில தகராறு இருப்பதாகவும் அவரது குடும்பத்தினர் தன்னை தாக்குவதாகவும் மூன்று முறை புகார் அளித்துள்ளார். இப்படி பல முறை ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் மன வேதனை அடைந்த காசி இன்று சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு  

மண்ணெண்ணய் கேனுடன் வந்து மண்ணெண்ணய் ஊற்றி கொண்டு தீகுளிக்க முயற்சித்தார். உடனடியாக காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தினார்கள் பின்னர் முதியவர் காசியை ஆம்புலன்சில் ஏற்றி அழைத்து சென்றதுடன் தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


   நிலத்தகராறு காரணமாக முதியவர் ஆட்சியர் அலுவலகத்தில் தீகுளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது காவல்துறையினர் மக்கள் குறைதீர்வு முகாமுக்கு வருபவர்கள் சோதனை செய்த பின்னர் தான் உள்ளே அனுமதிக்கின்றனர் இருப்பினும் முதிவர் தீகுளிக்க முயன்றது காவல்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.