அண்ணாவும் பெரியாரும் தமிழை வளர்க்கவில்லை! சொல்கிறார் தமிழிசை!

ஜி.கே.சேகரன்,
அரசின் பல கோடி ரூபாய் செலவில் திமுகவுக்கு பிரச்சாரம் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் இதிலும் அதிகாரிகளும் ஊழல் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 தேர்வை ரத்து செய்து மீண்டும் நடத்த வேண்டும் - அண்ணாவும் பெரியாரும் தமிழை வளர்க்கவில்லை ஆண்டாள் தான் தமிழை வளர்த்தார் முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வேலூரில் பேட்டி
வேலூர்மாவட்டம், வேலூர் சத்துவாச்சாரியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்க தெலுங்கானா முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வருகை தந்தார்.
முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழக அரசு 4 ஆண்டுகளாக எதனையும் செய்யாமல் தற்போது வீட்டு பிரச்சணைகளையும் நாட்டு பிரச்சணைகளையும் 45 நாட்களில் தீர்ப்போம் என்று கூறி அரசு செலவில் பல கோடி ரூபாய் செலவு செய்து திமுகவுக்கு பிரச்சாரம் செய்கின்றனர்.
இது ஓட்டுக்காக தான் செய்யப்படுகிறது உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் அதிகாரிகளே பயன்படுத்தி ஊழல் செய்கின்றனர்.
அக்காலத்தில் அண்ணாவும் பெரியாரும் தமிழை வளர்க்கவில்லை ஆண்டாள் தான் தமிழை வளர்த்தார் வரும் 27 ஆம் தேதி பிரதமர் மோடி கங்கை கொண்ட சோழபுரம் வருகிறார் இதுமிகுந்த மகிழ்ச்சி.
தமிழ் மீது தமிழக மக்கள் மீதும் மிகுந்த ஆர்வமுள்ள பிரதமர் வருவது நல்லது.
1300 ஏக்கருக்கு மேல் பயிற் விளைவிக்க தமிழக அரசு இப்போது 12 கோடி ஒதுக்கியுள்ளது ஆனால் தமிழகத்தை விட பிரதமர் தமிழின் பெருமையை எடுத்து சொல்கிறார். ஆனால் பாஜகவும் பிரதமரும் தமிழுக்கு எதிரானவர்கள் என்ற தோற்றத்தை திமுகவும் கூட்டணி கட்சிகளும் ஏற்படுத்தி வருகிறது.
பாரத பிரதமரும் ராஜேந்திர சோழனும் நாட்டின் வளர்ச்சி ஏற்படுத்தியதன் தொடர்பு இணைப்பாக உள்ளது. வட இந்தியா தென் இந்தியா என்ற பிரிவினை எடுபடாது. காமராஜரையும் இவர்கள் இழிவாக பேசுகிறார்கள்.
எல்லா புகழும் மற்ற தலைவர்களுக்கு செல்ல கூடாது ஸ்டாலினுக்கும் உதய நிதிக்கும் செல்ல வேண்டும் என்றால் இது கடும் கண்டனத்திற்குரியது.
எடப்பாடி பாஜக பற்றி தவறாக பேசவில்லை அவர் மற்ற கட்சிகளின் சூழ்ச்சி பலிக்காது என்று தான் சொல்லியுள்ளார்.
செல்வபெருந்தகை கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் கூட்டணி ஆட்சியில் பங்கு கேட்கின்றனர் திருமாவளவனும் சொல்கிறார் எங்கள் கூட்டணி தெளிவாக உள்ளது.
தமிழ்நாடு தேர்வாணைய தேர்வில் அதிக முறைகேடு நிச்சயம் நடந்துள்ளது. அதில் அதிக அளவு தவறான கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. சில ஆயிரம் இடங்களுக்கு பல லட்சம் பேர் தேர்வை எழுதியுள்ளனர். ஆனால் அவர்கள் வஞ்சிக்கபடுகின்றனர்.
குரூப் 4 தேர்வை மறு பரிசீலனை செய்ய வேண்டும் சாலையோர கொடிகம்பங்கள் அகற்ற கூடாது என சொன்னது திருமாவளவன்.
மகிழ்ச்சியாக இருப்பார் காரணம் பாஜக மற்றும் விடுதலை சிறுத்தை கொடி கம்பங்களை வைக்கவிடுவதில்லை ஆனால் அவர் கூட்டணியில் பாஜக உள்ளே வந்துவிடும் என சொல்லி அடிமையாக இருக்கிறார். அதிகாரிகள் கொடி கம்பங்கள் அகற்றுவதில் பாராபட்சம் காட்டுகின்றனர்.
காங்கிரஸ் திமுக கொடி அப்புறப்படுத்த மாட்டார்கள் பழைய ஓய்வூதியம் திட்டம் கேட்டு 72 மணி நேர போராட்டம் அறிவித்துள்ளனர்.
ஆனால் இந்த மோசமான அரசாட்சியால் வீட்டில் உள்ளவர்கள் ரோட்டில் நிற்கின்றனர். தூத்துக்குடி விமான நிலையம் திறக்க பிரதமர் வருகிறார்.
வேலூரிலும் விமான நிலையம் திறப்பு விழா பிரம்மாண்டமாக நடக்கும் பிரதமர் வருவாய் திமுக நீதிமன்றத்தில் சொன்னது கட்சியில் சேர யாரிடமும் ஓடிபி கேட்கவில்லையாம்.
ஆனால் அவர்கள் நீதிமன்றத்தில் ஒன்று சொல்வார்கள் மாற்றி மாற்றி பேசுவார்கள் திமுகவும் முதல்வரும் நிர்வாக ரீதியாக எடுத்து கொள்ளும் நடவடிக்கைகள் சரியில்லை என கூறினார் பேட்டியின் போது பாஜக மாவட்டத்தலைவர் தசரதன் நிர்வாகிகள் இளங்கோ.,குமரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்