எம்.எல்.ஏ.மகன் பிடியில் உள்ள அரசு மருத்துவமனையில் சேரும் சகதியும்!

ஜி.கே.சேகரன்,
வாணியம்பாடி அரசு மருத்துவமனை நுழைவாயிலில் மழைநீர் தேங்கி, சேரும் சகதியுமாக உள்ளதால் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகர மைய பகுதியில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. சட்டமன்ற உறுப்பினர் ஒருவரின் மகன் பிடியில் சிக்கித் தவிக்கும் இந்த மருத்துவமனைக்கு சேறும் சகதியும் சேந்து மேலும் ஒரு சோதனை வந்து சேர்ந்திருக்கிறது.
இங்கு சிகிச்சை எடுத்துக் கொள்ள சுற்று வட்டார பகுதிகளில் உள்ள சுமார் 200 க்கு மேற்பட்ட கிராமத்தைச் சேர்ந்த ஏழை நோயாளிகள் இந்த அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
இந்த 6 மாடிகள் கொண்ட புதிய அரசு மருத்துவமனைக்கு பழைய நுழைவாயிலில் இருந்து சுமார் 500 மீட்டர் தூரம் கடந்து செல்ல வேண்டும்.
தற்போது கடந்த 2 நாட்களாக பெய்த் கனமழை காரணமாக அந்த வழியில் குளம் போல் மழைநீர் தேங்கி சேரும் சகதியுமாக காட்சி அளிக்கிறது.
இந்த மருத்துவமனைக்கு சிகிச்சை பெறுவதற்கு வரும் நோயாளிகள் பெண்கள் மாற்று திறனாளிகள் என அனைவரும் மிகவும் அவதிப்பட்டு மருத்துவ மனைக்கு சென்று சிகிச்சை பெற்று செல்ல கூடிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
எனவே மாவட்ட நிர்வாகமோ அல்லது துறை ரீதியான அதிகாரிகளோ நோயாளிகள் செல்லக்கூடிய வழியில் மழைநீர் தேங்கி நிற்காதவாறு சிமெண்ட் அல்லது பேவர் பிளாக் அமைத்து வழியை சீரமைக்க வேண்டும் என்று நோயாளிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.