ரவுடிகள் மீது முன்னெச்சரிக்கை நடவடிக்கை எஸ் பி மணிவண்ணன் பேட்டி!
ஜி.கே.சேகரன்,
வேலூர்மாவட்டத்தில் தேர்தலை முன்னிட்டு மக்கள் அச்சமின்றி வாக்களிக்க ரவுடிகள் அனைவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர், பொதுமக்கள் சுதந்திரமாக வாக்களிக்க எல்லா நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் பேட்டி .
வேலூர்மாவட்டம்,வேலூரில் தற்போது கோடை வெப்பம் மிகவும் அதிகரித்துள்ளதால் போக்குவரத்து காவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன் அவர்கள் தொப்பி, மேலும் நீர் மோர் குளிர்பானங்களை வழங்கினார்.
கோடை காலம் முடியும் வரையில் நீர் மோர் குளிர்பானங்கள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அவருடன் துணை கண்காணிப்பாளர் திநாவுக்கரசு உடன் இருந்தார்.
பின்னர் காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், கோடை காலம் என்பதால் நீர் மோர் வழங்கும் திட்டம் துவங்கியுள்ளோம். சூரிய ஒளியை தாங்கும் தொப்பி வழங்கியுள்ளோம். தேர்தலுக்காக அனைத்து ரவுடிகள் மீது முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளோம்.
துப்பாக்கிகளும் காவல்நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு பாதில்லாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் எவ்வித அச்சமின்றி வாக்களிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
ஆகவே மக்கள் எவ்வித பயமுமின்றி வாக்களிக்கலாம். துணை ராணுவ படையினர் ஐந்து கம்பெனிகள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
பதட்டம் நிறைந்த வாக்குசாவடிகளில் கூடுதலான காவலர்களும் ரோந்து பணியும்தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என கூறினார்

admin
