வாரச்சந்தையில் வாக்கு சேகரித்த பாமக வேட்பாளர் பாலு!
கு.அசோக்,
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் வழக்கறிஞர் பாலு ஆற்காடு வாரச்சந்தை பகுதியில் வாக்குகளை சேகரித்தார் .
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பகுதியில் உள்ள வாரச்சந்தை பகுதிகளில் மாம்பழச் சின்னத்துக்கு வாக்கு கேட்டு பிரச்சாரம் நடைபெற்றது.
பாமக வேட்பாளர் பாலு காய்கனி வியாபாரர்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது அரக்கோணம் தொகுதி தேர்தல் அறிக்கை வழங்கினார்.
அப்போது பேசிய அவர் அரக்கோணம் தொகுதியில் தீர்க்க வேண்டிய பிரச்சினைகள் ஏராளமாக உள்ளது இதனை மூன்று முறையாக எம்பியாக இருந்த ஜெகத்ரட்சகன் அவர்கள் செய்யவில்லை.
அவர்எந்த ஒரு வளர்ச்சிப் பணிக்கும் முன்னேற்றத்திற்கும் கொண்டு செல்லவில்லை. எம்பி பதவி என்பது அவருடை சொத்தை பாதுகாக்க மட்டுமே பயன்படுத்திக் கொண்டு வருகிறார்.
தன்னை தேர்வு செய்தால் முழு நேரம் மக்கள் பணியாற்றுவேன் என வாக்குறுதி அளித்தார்.
அவருடன் பாமக மாவட்ட செயலாளர் சரவணன் முன்னாள் மாவட்ட செயலாளர் முரளி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

admin
