லாரி கவிழ்ந்து மது பாட்டில்கள் சிதறல்! மது பிரியர்களை விரட்டி அடித்த போலீசார்!

லாரி கவிழ்ந்து மது பாட்டில்கள் சிதறல்! மது பிரியர்களை விரட்டி அடித்த போலீசார்!

ஜி.கே.சேகரன்,

 மதுபான ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து விபத்து ஓட்டுநருக்கு காயம் மது பிரியர்கள் மதுபாட்டில்களை எடுக்க சென்றதால் காவல்துறை விரட்டியடிப்பு 

    திருப்பத்தூர்மாவட்டம்,ஆம்பூர் அருகே மாராப்பட்டு என்ற இடத்தில் வேலூரில் இருந்து அரசு மதுபான பாட்டில்களை வாணியம்பாடிக்கு ஏற்றி சென்ற  லாரி திடீரென விபத்துள்ளாகி கவிழ்ந்தது.

இதில் பல லட்சம் மதிப்புள்ள 50 ஆயிரம்  மதுபாட்டில்கள் சாலையில் கவிழ்ந்தது பலர் பாட்டில்களை எடுத்து சென்றனர்..

பின்னர் போலீசாரும் மதுபாட்டில்களை எடுக்க வந்தவர்களை விரட்டியடித்தனர்.

லாரி ஓட்டுநர் சுந்தர மூர்த்தி உட்பட 3பேர்  காயமடைந்து ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் இதுகுறித்து ஆம்பூர் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்..