ஏரி நிரம்பியதால் கிடாவெட்டி கறிவிருந்து!
ஆர்.ரமேஷ்,
கடந்த 22 ஆண்டுகளாக காய்ந்து போயிருந்த ஏரியை பென்சல் புயல் மழை நிரப்பியிருக்கிறது. இதனால் மகிழ்ச்சியடைந்த கிராமத்தினர் கிடா வெட்டி கறி விருந்து நடத்தினர்.
தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே உள்ளது எம்.வேட்ரப்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் உள்ள ஏரியின் பெயர் வேட்டையன். இந்த ஏரியை சார்ந்து சுமார் 250- விவசாய குடும்பங்கள் வசிக்கின்றனர்.
அப்படியிருக்க, கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்பு வேட்டையன் ஏரி நிறைந்தது. அதன் பிறகு ஏரிக்கு தண்ணீர் வரத்து இல்லாமல் காய்ந்து போனது. இதனால் பொதுமக்களும் விவசாயிகளும் தண்ணீருக்கு மிகுந்த சிரமப்பட்டு வந்தனர்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களாக மொரப்பூர் மற்றும் இதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையால் வேட்டையன் ஏரி நிரம்பியது.
22 ஆண்டுகளுக்குப் பிறகு தண்ணீர் நிரம்பியதால் கிராம மக்கள் கிடா வெட்டி கறிவிருந்து நடத்தி மகிழ்ந்தனர்.

admin
