அமைச்சர் துரைமுருகனின் டவுட்டு! மத்திய அரசிடம் ரூ.,2008 கோடி கேட்டுள்ளோம்! செவிசாய்ப்பார்களா பார்க்கலாம்!
கு.அசோக்,
புயல் வெள்ளத்தால் பாதித்த பாதிப்புகளுக்கு நிவாரணத்திற்காக மத்திய அரசிடம் ரூ.,2008 கோடி கேட்டுள்ளோம் குழு அனுப்ப கோரி மத்திய அரசுக்கு கடிதங்களையும் அனுப்பியுள்ளோம் அவர்கள் செவிசாய்ப்பார்கள் என கருதுகிறேன் - மாற்றுத்திறனாளர்களை தொழில் முனைவோர்களாக மாற்ற அரசு நடவடிக்கை எடுக்கும் அமைச்சர் துரைமுருகன் பேச்சு - - மலை ஓரம் வசிப்பவர்கள் நீண்ட நாட்களாக வசிக்கும் ஏழைகள் என- நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேட்டி.
வேலூர்மாவட்டம், மாற்றுத்திறனாளிகள் துறையின் சார்பில் அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தின விழாவானது மாவட்ட ஆட்சியர் வே.இரா.சுப்பு லெட்சுமி தலைமையில் நடந்தது,
இதில் தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு 129 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ,3 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இவ்விழாவில் சட்டமன்ற உறுப்பினர்கள் கார்த்திகேயன், நந்தகுமார்,அமுலு,துணை மேயர் சுனில் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மேலும் திரளான மாற்றுத்திறனாளர்கள் மாவட்டம் முழுவதுமிருந்து கலந்துகொண்டனர்.
இதில் அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், மாற்றுத்திறனாளர்கள் பல திறமைகளை கொண்டவர்கள் அவர்களுக்கு சுய தொழில் மூலம் தொழில் முனைவோர்களாக மாற்ற முதல்வரிடம் கூறி தொழில் முனைவோர்களாக மாற்றுவோம் என பேசினார்
பின்னர் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் கூறுகையில் புயல் வெள்ளத்தால் பாதித்த பாதிப்புகளுக்கு நிவாரணத்திற்காக மத்திய அரசிடம் ரூ.,2008 கோடி கேட்டுள்ளோம். குழு அனுப்ப கோரி மத்திய அரசுக்கு கடிதங்களையும் அனுப்பியுள்ளோம்.
அவர்கள் செவிசாய்ப்பார்கள் என கருதுகிறேன்.
சாத்தனூர் அணையில் போதிய முன் அறிவிப்பின்றி அணையை திறந்ததாக சொன்ன மேதாவிகளுக்காக அறிவிக்கை வெளியிட்டுள்ளேன். மலையோரம் உள்ளவர்கள் வீடு கட்டி வசிப்பவர்கள் நீண்டநாட்களாக இருக்கும் ஏழைகள் இது போன்று எப்போதும் மலை ஓரத்தில் நடக்காது.
ஆனால் திருவண்ணாமலை ஐந்து நாட்கள் மழை பெய்ததே காரணம் என சொன்னார்.

admin
