இன்று மின்னணு பட்ஜெட் தாக்கல்!

இன்று மின்னணு பட்ஜெட் தாக்கல்!

ஜி.சாந்தகுமார்,

 இன்று தமிழக சட்டபேரவையில் மின்னணு பட்ஜெட்டை தாக்கல் செய்யப்படுகிறது.

தமிழக பட்ஜெட் 2023-24 நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்களால் சட்டமன்றத்தில் இன்று (மார்ச் 20) தாக்கல் செய்யப்படுகிறது.

  இதில் மகளிருக்கான ரூ.1,000 மாதாந்திர உரிமைத் தொகை, சமையல் எரிவாயுவிற்கு ரூ.100 மானியம், மாதம் ஒருமுறை செலுத்தும் வகையில் மின் கட்டணம், முதல்வரின் காலை உணவுத்திட்டம் விரிவாக்கம், முதியோர் ஓய்வூதியம் ரூ.1,500 உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

  மின்னணு பட்ஜெட்டை தாக்கல் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.