மந்திரம் செய்திருக்கேன்! நான் பேசும் போது எழுந்து போனால் ரத்தம் கக்கி செத்துடுவீங்க! செல்லூர் ராஜூன் பேச்சால் சிரிப்பலை!

மந்திரம் செய்திருக்கேன்! நான் பேசும் போது எழுந்து போனால் ரத்தம் கக்கி செத்துடுவீங்க! செல்லூர் ராஜூன் பேச்சால் சிரிப்பலை!

டி.இ.முகமது,

நான் பேசும் போது யாராவது எழுந்து போனால் ரத்தம் கக்கி செத்துடுவீங்க.... ஏன்னா நான் மந்திரம் செய்து விட்டு வந்திருக்கிறேன் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ  பிரச்சாரக்கூட்டத்தில் பேசியது அங்கிருப்போரை கலகலப்பாக்கியது.

மதுரை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.திமு.க. வேட்பாளர் சரவணனின் அறிமுகம் மற்றும் பிரசாரம் கூட்டம் செல்லூரில் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பங்கேற்று பேசினார். கூட்டத்தில் நான் பேச்சை ஆரம்பிக்க போவதால் நீண்ட நேரம் அமர்ந்து உள்ளவர்கள் எழுந்து போவது என்றால் போகலாம்.  இங்க இருந்தா பேசக்கூடாது. இடையில் எழுந்திருக்க கூடாது. அப்படி  இருக்கிறங்க உட்காருங்கள். அப்படி இல்லன்னா ரத்தம் கக்கி செத்துருவீங்க.

மந்திரம் செய்துவிட்டு வந்திருக்கேன்.  கூட்டத்தில் நான் பேசும்போது யாராவது எழுந்திருச்சி போனா அவங்க வீட்டுக்கு போறதுக்கு முன்னாடி ரத்தம் கக்கி சாவாங்க...னு சொல்லிட்டு வந்துருக்கேன் என்று பேசினார்.

செல்லூர் ராஜூவின் பேச்சை கேட்ட கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வாய்விட்டு சிரித்தனர்.