ஆந்திராவில் பாலாற்றின் குறுக்கே அணைகட்ட ஜெகன் மோகன் ரெட்டி அடிக்கல் நாட்டுகிறார்! வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் அவசரம் காட்டி பாலிடிக்ஸ்!
ஜி.கே.சேகரன்,
கர்நாடக மாநிலத்தில் உற்பத்தியாகி தமிழகத்தில் முடிவடையும் பாலாறு, இடையே ஆந்திராவை கடக்கிறது. அங்கு குப்பம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கணேசபுரம் அருகே குரங்குமலை பகுதியை கடக்கும் பாலாற்றின் குறுக்கே அணைகட்ட வேண்டும் என கடந்த 20 வருடங்களாக ஆந்திர அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2005 ஆம் ஆண்டு வாக்கில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் ஆந்திர பாலாற்றின் குறுக்கே அணை கட்ட அனுமதிக்கக்கூடாது என்று கேட்டுக் கொண்டிருந்தார். அதே போல் பாமக வும் இந்த விஷயத்தில் கவனம் செலுத்தியது.
இந்நிலையில் தமிழக அரசு சார்பில் ஜெயலலிதா தொடர்ந்த வழக்கு வழக்கு நிலுவையில் இல்லை என்று அம்மாநில நீர் பாசனம் மற்றும் பஞ்சாயத்துராஜ் அமைச்சர் பெத்தாரெட்டி பேட்டி அளித்திருக்கிறார்.
ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி இன்று பிப்-26 ஆம் தேதி அந்திநிவா திட்டத்தினை தொடங்கி வைக்க குப்பம் வருகை புரிய உள்ள நிலையில் அமைச்சர் பெத்தாரெட்டி அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு செய்தியாளர்களை சந்தித்துள்ளார்.
அப்போது செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், குப்பம் தொகுதிக்கு வருகை புரியும் ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அந்திநிவா திட்டத்தினை தொடங்கி வைப்பதாகவும், பின்னர் நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிறகு பாலாற்றில் நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்கான பணிகளையும் தொடங்க உள்ளதாகவு. தெரிவித்தார்.

அவர்கடந்த 1892 இல் சென்னை மாகாணம் மற்றும் மைசூர் மாகாணமாக இருந்தபோது பாலாற்றில் தடுப்பணை கட்டக் கூடாது என்ற ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் கடந்த 2005 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் பாலாற்றில் தடுப்பணை கட்டுவதை தடுக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்து இருந்தார். அந்த வழக்கானது தற்போது அந்த வழக்கு முடிவு பெற்றது.
ஆகவே அந்தி நிவா திட்டத்தினை தொடங்க வரும் ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பாலாற்றில் பல்வேறு திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே பல தடுப்பணைகளை அமைத்திருக்கிறது. அப்படியிருக்க மேலும் அணைகட்டினால் தமிழகத்திற்கு சொட்டு தண்ணீர் வராது. இந்நிலையில் ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியில், கனேசபுரத்தில் தமிழக அரசின் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் வழக்குகள் முடிந்துவிட்டதாக ஆந்திர அமைச்சர் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயலலிதா மற்றும் பாமகவால் தொடுக்கப்பட்ட வழக்கு வரும் மார்ச் மாதம் 13 ஆம் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ள நிலையில் ஆந்திர அமைச்சர் நீதிமன்றத்தை மையப்படுத்தி பொய்யான தகவலை தெரிவித்துள்ளார்.
கிது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்க்கு நிலுவையில் இருக்கும் நிலையில் ஆந்திர முதல்வரே தடுப்பணை பணிகளுக்காக அடிக்கல் நாட்டுவது தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குப்பம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடர்ந்து 7 வது தடவையாக இருந்து வரும் நிலையில், எதிர்கட்சிகள் ஆட்சிக்கு வரும் போதெல்லாம் குப்பத்தில் பாலாற்றின் குறுக்கே அணைகட்டுவதாக பாலிடிக்ஸ் செய்து வருவது வாடிக்கைதான்....அ என்றாலும் கூட தமிழக அரசு இதில் கொஞ்சம் கவனம் செலுத்தினால் நலம்.

admin
