போதை பழக்கத்தால் வேலூர் இளைஞர்களுக்கு அதிக பாதிப்பு! பாஜக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் குற்றச்சாட்டு!

போதை பழக்கத்தால் வேலூர் இளைஞர்களுக்கு அதிக பாதிப்பு! பாஜக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் குற்றச்சாட்டு!

ஜி.கே.சேகரன்,

 போதையால் இளைஞர்கள் சீரழிந்து வருகின்றனர் திமுக ஒரு சொட்டு மது இல்லாமல் ஆக்குவோம் என்றனர் ஆனால் தற்போது இளைஞர்கள் போதை பொருட்களால் பாதிக்கபடுகின்றனர்.  அதனை தடுக்க தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டுமென புதிய நீதிக்கட்சித்தலைவர் ஏ.சி.சண்முகம் அனைக்கட்டு வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பேசினார்.

 வேலூர்மாவட்டம், வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்குபட்ட அணைக்கட்டு மூலைகேட் அருகில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் போட்டியிடும் புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் அறிமுக கூட்டமானது பாட்டாளி மக்கள் கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளர் இளவழகன் தலைமையில் நடந்தது.

 இதில் பாமக மாநில துணை தலைவர் என்.டி.சண்முகம் மற்றும் மாவட்டத்தலைவர் வெங்கடேசன், முன்னாள் அமைச்சர் பாண்டுரங்கன், உள்ளிட்ட திரளானோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.

 இக்கூட்டத்தில் மக்கள் மத்தியில் பாஜக வேட்பாளரும் புதிய நீதிக்கட்சியின் தலைவருமான ஏ,சி.சண்முகம் பேசுகையில் பாரதிய ஜனதா மீண்டும் மத்தியில் ஆட்சிக்கு வரும். பாரத பிரதமராக மோடி மீண்டும் வெல்வார் அப்போது அந்த அமைச்சரவையில் தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் சௌமியா அன்புமணியும் அமைச்சராவார்.

  தொடர்ந்து எங்கள் கூட்டணி போதை கலாச்சாரத்திற்கு எதிராக குரல் கொடுத்து வருகிறது. அதனால் தான் நான் வேட்பு மனுவை தாக்கல் செய்தவுடன், பாமக தலைவர் அன்புமணி ராமதாசை தர்மபுரி கூட்டத்தில் பங்கேற்று  வாழ்த்து கூறினேன்.

 திமுக அரசு தமிழகத்தில் ஒரு சொட்டு மது கூட இல்லாமல் ஒழிப்போம் என்றார்கள். ஆனால் தற்போது அதற்குமாறாக இளைஞர்கள் போதை பொருட்களுக்கு அடிமையாகி வருகின்றனர். வேலூரில் அதிக அளவு இளைஞர்கள் போதை பொருட்கள் பயன்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  பெற்றோர்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல எதிர்காலம் அமைய வேண்டுமென்றால் மீண்டும் பிரதமராக மோடி வரவேண்டுமென எங்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களியுங்கள் என பேசினார்.