எப்படியோ பணம் பறிமுதல் செய்த வேலூர் பறக்கும்படையினர்!
கு.அசோக்,
மற்ற தொகுதிகளைக் காட்டிலும் வேலூர் பறக்கும் படையினர் பணம் பறிமுதல் செய்வதில் சற்று மந்தமாகவே உள்ளதாக கூறப்படும் நிலையில் தற்போது ஒரு நடவடிக்கையை எடுத்திருக்கிறார்கள்.
வேலூர் கிறிஸ்டியான்பேட்டை சோதனை சாவடியில் எல்.ஐ.சி ஏஜெண்ட்டிடம் இருந்து உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ1லட்சத்து 20 ஆயிரம் பணம் பறிமுதல் செய்து தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை எடுத்தனர்.
வேலூர் மாவட்டம், காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை சோதனை சாவடியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் காட்பாடி வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன் தலைமையில் வாகன சோதனை செய்தனா.¢ அப்போது பசுமாத்தூரை சேர்ந்த எல்.ஐசி ஏஜெண்ட் வீரமணி இருசக்கர வாகனத்தில் வந்தார்.
அவரிடம் சோதனை செய்ததில் உரிய ஆவணங்களின்றி கொண்டு வந்த ரூ.1லட்சத்து 20 ஆயிரம் ரொக்கப்பணத்தை பறிமுதல் செய்தனர்.
எல்.ஐசி ஏஜெண்ட் வீரமணியோ இது மக்களிடம் வசூல் செய்த பணம் என கூறினா£.¢ இருப்பினும் உரிய ஆவணங்கள் இல்லாததால் கைப்பற்றப்பட்ட ரொக்கப்பணத்தை காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்
பிற மாவட்டங்களை காட்டிலும் பறக்கும் படையினர் பணம் பறிமுதல் செய்வது வேலூர் மாவட்டத்தில் குறைவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது?

admin
