மண்டல அலுவலர்கள் இப்படித்தான் செயல்படுவார்கள்! ஆட்சியர் தலைமையில் ஆலோசனை!
ஜி.கே.சேகரன்,
நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 2024 ஐ முன்னிட்டு தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள மண்டல அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர், சுப்புலெட்சுமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 2024 ஐ முன்னிட்டு வேலூர் நாடாளுமன்ற தொகுதியிலுள்ள, வேலூர் சட்டமன்ற தொகுதியில் வாக்குப்பதிவிற்காக 91 அமைவிடங்களில் 245 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பணியில் ஈடுபடவுள்ள மண்டல அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் வே.இரா.சுப்புலெட்சுமி தலைமையில் நடைபெற்றது.
மேற்படி, தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள 20 மண்டல அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டமும் நடத்தப்பட்டது.
வேலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இதில், வாக்குச்சாவடி மையங்களில் குடிநீர் வசதி, கழிப்பறை வசதி மற்றும் மாற்றுத்திறனாளிகள், முதியோர் வாக்களிக்க ஏதுவாக சாய்தள வசதி போன்ற அடிப்படை வசதிகள் சீராக உள்ளனவா என உறுதி செய்யவும், வாக்குப்பதிவு தினத்தன்று மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்குச்சாவடி அலுவலர்களிடம் முறையாக ஒப்படைக்கவும், தேவையான உதவிகளை செய்யவும் 25 மண்டல குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது.
ஒரு மண்டல குழுவில் 1 மண்டல அலுவலர், 1 உதவி மண்டல அலுவலர், 1 உதவியாளர் மற்றும் 1 காவலர் ஆகியோர் பணியில் இருப்பார்கள். இவைகள் குறித்து இந்த கூட்டத்தில் ஆட்சியர் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

admin
