உதயசூரியன்... மாம்பழம்....கடும் பிரச்சாரம்!
ஜி.கே.சேகரன்
மாம்பழ சின்னத்துக்கு வாக்கு கேட்டு வழக்கறிஞர் பாலுவும், உயசூரியன் சின்னத்துக்கு ஓட்டுபோடுங்க என்று ஜெகத்ரட்சகனும் அரக்கோணம் தொகுதியை பரபரப்பாக வைத்திருக்கிறார்கள். அவர்களில் பாமக பாலு, சட்டபடி பல்வேறு பணிகளை அரக்கோணம் தொகுதி மக்களுக்காக செய்து முடிப்பேன், கூடவே எனக்கு வாக்களித்து அரசியல் அதிகாரம் கொடுங்கள் என்று கூறியும், திமுக ஜெகத்ரட்சகன் தன்னுடைய தமிழ் புலமை மற்றும் வைட்டமீன் "ப"-வை கொண்டும் மக்களை சந்தித்து வாக்கு கேட்டுவருகின்றனர்.
அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில், சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட அண்ணா நகர், தோப்பு, பெருமாள் கோவில், கருமாரி அம்மன் கோவில் , பெரிய மலை அடிவாரம் ஆகிய பகுதிகளில் அரக்கோணம் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் அவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது திரளான பெண்கள் ஆரத்தி எடுத்து ,மலர் தூவி, பொன்னாடை போர்த்தி ஆலுயரம் மாலை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளித்தனர். அப்போது பேசிய அவர் கலைஞரைப் போல் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
ஆட்சி பொறுப்பேற்று 33 மாதத்தில் 33 ஆண்டுக்கான சாதனைகளை செய்துள்ளார். மகத்தான மகளிர் உரிமைத்தொகை மகளிருக்கு பயன்படும் வகையில் இலவச பேருந்து வசதி, மாணவர்களுக்கு பயன்படும் வகையில் காலை சிற்றுண்டி திட்டம், ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் இல்லம் தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி உள்ளிட்ட திட்டங்கள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற சிறந்த திட்டங்கள் ஆகும்.
மேலும் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்தால் வறுமை கோட்டுக்கு கீழே உள்ள ஏழை எளிய மக்களுக்கு ஒரு லட்சம் வழங்கப்படும், 100 நாள் வேலையை 150 நாளாக மாற்று தினசரி ஊதியமாக 400 ரூபாயாக வழங்கப்படும், ஒரு லிட்டர் பெட்ரோல் 25 ரூபாய்க்கு வழங்கப்படும் என உறுதி அளித்தார். இடையிடையே தமேக்கே உரிய தமிழ் புலமையை மக்கள் மத்தியில் வாரி வழங்கினார்.
அவரைத் தொடர்ந்து பேசிய சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.முனிரத்தினம், ஜெகத்ரட்சகன் அவர்கள் யோக நரசிம்மர் சுவாமி திருக்கோவில் கோபுர திருப்பணிக்கு 5 கிலோ தங்கம் வழங்கினார். ரோப்க்கார் கட்டுமான பணிக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கினார். மேலும் பட்டா இல்லாதவர்களுக்கு பட்டா வழங்க ஏற்பாடு செய்வார் என உறுதி அளித்தார்.
பா.ம.க.வேட்பாளர் பாலு.
காவேரிப்பாக்கம் ஓச்சேரி சிறுகரம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் அரக்கோணம் பாமக வேட்பாளர் பாலு தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.
சோளிங்கர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காவேரிப்பாக்கம் ஒன்றியத்தில் ஓச்சேரி, சிறுகரும்பூர் உள்ளிட்ட 50 மேற்பட்ட கிராமங்களில் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் வழக்கறிஞர் பாலு அவர்கள் வாக்கு சேகரித்தார். திராளான பெண்கள் ஆரத்தி எடுத்து பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
அப்போது பேசியபாமக வேட்பாளர் பாலு நரேந்திர மோடி அவர்களின் ஆட்சி இந்தியாவில் மூன்றாவது முறை மலர்ந்திடவும், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தமிழகத்தில் புதிய அரசியல் தந்திடவும், அரசியல் மாற்றங்களை ஏற்படுத்தவும் மாம்பழம் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். மூன்று முறை எம்பியாக இருந்து மது ஆலையை வணிகம் செய்வதில் மட்டுமே தொழிலாக கொண்டுள்ள ஜெகத்ரட்சகன் ஓட்டு போட்ட மக்களுக்காக எந்த ஒரு அடிப்படை வசதி கூட செய்து தரவில்லை என்றார்.
அதே போல் சோளிங்கர் அருகேயுள்ள காட்டு கண்டிகை நெல்வாய் திருமால்பூர் உள்ளிட்ட கிராமங்களில் அரக்கோணம் பாராளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் பாலு வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்
மேலும், நெமிலி ஒன்றியத்துக்கு உட்பட்ட அசநெல்லிகுப்பம் அம்மன் கோயிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு மாட்டு வண்டியில் பிரச்சாரம் துவங்கப்பட்டு காட்டு கண்டிகை,நெல்வாய் ,நெல்வாய் கண்டிகை, திருமால்பூர் உள்ளிட்ட முப்பதுக்கு மேற்பட்ட கிராமங்களில் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
மாம்பழம் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார். அப்போது சோளிங்கர் சட்டமன்றத் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் பாமக ஒருங்கிணைந்த மாவட்ட அமைப்பு செயலாளர் அ.ம.கிருஷ்ணன், இளைஞர் சங்க செயலாளர் சக்கரவர்த்தி மற்றும் பலர் உடன் இருந்தனர்.
மேலும் பாமக மாவட்ட செயலாளர் சரவணன்,அ மைப்புச் செயலாளர் அ.ம.கிருஷ்ணன் இளைஞர் சங்க செயலாளர் சக்கரவர்த்தி மற்றும் பலர் உடன் இருந்தனர்.
பா.ம.க.வேட்பாளர் பாலு உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றங்களில் திறம்பட வாதாடக்கூடிய மூத்த வழக்கறிஞர் ஆவார்.. இந்நிலையில் அவர் சட்ட ரீதியாகவும், அரசியல் அதிகாரத்தின் மூலமாகவும் அரக்கோணம் தொகுதி மக்களுக்கு பல்வேறு பணிகளை செய்து கொடுப்பேன் என்று சொல்லி வாக்கு சேகரித்து வருகிறார்.

admin
