அண்ணாச்சி அமைச்சரின் அசத்தல் பிரச்சாரம்! திட்டங்களை கூறி வாக்கு சேகரிப்பு!

அண்ணாச்சி அமைச்சரின் அசத்தல் பிரச்சாரம்! திட்டங்களை கூறி வாக்கு சேகரிப்பு!

 கே.ஏ.ஜெகதீஸ்வரி,

தென்காசி பாராளுமன்ற தொகுதியின் தி.மு.க தலைமையிலான இந்தியா கூட்டணியின் வெற்றி வேட்பாளர் Dr.ராணி ஸ்ரீகுமார் அவர்களை ஆதரித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளர் மாண்புமிகு K.K.S.S.R.இராமச்சந்திரன் அவர்கள் உதய சூரியன் சின்னத்தில் வாக்குகள் சேகரித்தார்.

  இராஜபாளையம் நகர் பகுதிகளான மலையடிப்பட்டி, பழைய பேருந்து நிலையம், முடங்கியார் ரோடு கனகராஜ் மருத்துவமனை அருகில், மதுரை ராஜா கடை தெரு, செட்டியார்பட்டி அரசரடி மற்றும் சேத்தூர் பேருந்துநிலையம் ஆகிய பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

  இந்நிகழ்வுகளில் பேசிய அமைச்சர்,

 இராஜபாளையம் மலையடிப்பட்டியில் 26 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 24Xமணி நேர  குடிநீர் வழங்கிட தேர்தல் முடிந்தவுடன் அடிக்கல் நாட்டப்படவுள்ளது.ரயில்வே மேம்பாலம், தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை திட்டம் PACR அரசு மருத்துவமனையை மாவட்டத்தின் தலைமை மருத்துவமனைக்கு இணையாக தரம் உயர்த்துதல் திட்டம் போன்ற திட்டங்கள் பொதுமக்களால் வரவேற்கப்பட்டவையாவும் நடைமுறை படுத்தப்பட்டு வருகிறது. மேலும் இராஜபாளையம் தொகுதியில் விரைவில் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனக்கூறினார்.

செட்டியார்பட்டியில் பேசிய அமைச்சர் 2009 ம் ஆண்டில்

கலைஞர் ஆட்சியில் நான் அமைச்சராக இருந்தபோது சாஸ்தா கோவில் கூட்டுக்குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டது, மேலும் செட்டியார்பட்டி பேரூராட்சியில் குடிநீர் வசதியை மேம்படுத்துவதற்காக 10 கோடி ரூபாயில் கூடுதல் திட்டமான ராட்சத கிணறுகள் மும்முனை மின்சார இணைப்புகள் போன்ற திட்டங்களுக்கு எனது தலைமையில் 06.03.2024 அன்று பூமி பூஜை செய்து அதற்கான பணியும் நடைபெற்று வருகிறது எனக்கூறினார்.

 அதனை தொடர்ந்து சேத்தூரில் பேசிய அமைச்சர் அவர்கள்,

சேத்தூர் பேரூராட்சியில் குடிநீர் வசதியை மேம்படுத்துவதற்காக 3  கோடி ரூபாய் மதிப்பில்  24 மணி நேர மும்முனை மின்சாரன் வழங்கிட எனது தலைமையில் பூமிபூஜை நடைபெற்றது, மேலும் பிராக்குடி கண்மாயிலிருந்து புதிய கூட்டுக்குடிநீர் திட்டம் அமைக்க ஞிறிஸி தயாரிக்கும் பணியும் நடைபெறவுள்ளது எனக்கூறினார்

மேலும் பேசிய அமைச்சர்,

 முதலமைச்சர் அவர்களில் பொன்னான ஆட்சியில் குடும்ப தலைவிகளுக்கு உரிமை தொகை மாதம் 1000 ரூபாய், கல்லூரி மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டம் மூலம் மாதம் 1000 ரூபாய், பெண்களுக்கு அரசு பேருந்துகளில் இலவச விடியல் பயணம்பள்ளிக்குழந்தைகளுக்கு காலை உணவுத்திட்டம் போன்ற சிறப்பான திட்டங்களை அறிமுகப்படுதி அதை செயல்படுத்தியும் காட்டியவர் நமது முதலமைச்சர் அவர்கள், எனவே திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி மத்தியில் ஆட்சி அமைந்தவுடன் சமையல் கியாஸ் சிலிண்டரின் விலை 500 ரூபாயாகவும், பெட்ரோல் விலை 75 ரூபாயாகவும், டீசல் விலை 65 ரூபாகாகவும் குறைத்திட அனைத்து பொதுமக்களும் Dr.ராணி ஸ்ரீகுமார் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற செய்யுமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.

  இந்த பிரச்சாரத்தின் போது தனுஷ் M.குமார்.,M.P அவர்கள்M.L.A. S.தங்கப்பாண்டியன் ஒன்றிய சேர்மன் சிங்கராஜ், நகராட்சி சேர்மன் பவித்ராஷியாம், மாவட்ட துணை செயலாளர் வாரிய துணை தலைவர் ராஜா அருண்மொழி, நகர செயலாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்டராஜா, பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், பேரூராட்சி சேர்மன்கள் ஜெயமுருகன், பாலசுப்பிரமணியம், பேரூர் கழக செயலாளர்கள் இளங்கோவன், சிங்கம்புலி அண்ணாவிஇந்தியா கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், கழக முன்னோடிகள் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்துகொண்டனர்.