என்னை எம்பியாக அனுப்புங்கள் மந்திரியாக வருகிறேன்! வாக்கு சேகரிப்பில் பாஜக வேட்பாளர் ஏசி சண்முகம்!
கு.அசோக்,
உங்கள் பகுதியில் இருக்கக்கூடிய குடிசை வீடுகள் அனைத்தையும் கான்கிரீட் வீடுகளாக மாற்றித் தருகிறேன் ஏ சி சண்முகம் வாக்குறுதி.
வேலூர்மாவட்டம்,பேர்ணாம்பட்டு அருகேயுள்ள நரியம்பட்டு பகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட பாஜக வேட்பாளர் ஏசி சண்முகத்திற்கு பாஜக பாமக அமமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சித் தொண்டர்கள் சார்பில் மலர் தூவியம் ஆரத்தி எடுத்தும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அப்போது, பேசிய ஏசி சண்முகம் நரியம்பட்டு பகுதி ஒரு நல்ல உற்சாகமான கிராமம்.,இந்த தொகுதியில் எம்.பியாக ஜெயித்து விட்டு சென்றாரே அவர் இந்த பகுதிக்கு வரவே இல்லையா?
இப்பகுதியில் உள்ள குடிசை வீடுகளை ஏன் அவர் பிரதமரின் திட்டத்தின் கீழ் கான்கிரீட் வீடுகளாக மாற்றித் தரவில்லை.
நான் வெற்றி பெற்ற பிறகு இப்பகுதியில் உள்ள குடிசைகள் அனைத்தும் பிரதமர் மோடியின் திட்டத்தின் கீழ் கழிவரையுடன் கூடிய காங்கிரீட் வீடுகளாக அமைத்துக் கொடுப்பேன்.
4 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டித் தரப்படும்.
பிரதமரின் திட்டத்தை பொது மக்களிடையே கொண்டு சேர்ப்பது எம் பி யின் வேலை.
இந்த ஏசி சண்முகம் வெற்றி பெற்று சென்றால் பிரதமரின் அமைச்சரவையில் இடம் பிடித்து இரண்டு லட்சம் வீடுகளை கட்டுவதற்கான திட்டங்களை கொண்டு வருவேன்.
நரியம்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை ஒரு அரசு மருத்துவமனையாக நான் வெற்றி பெற்று பொறுப்பேற்ற அடுத்த ஆறு மாதங்களில் கட்டித் தருகிறேன்.
இதோ இந்த பகுதியில் உள்ள ஒரு குடிசை வீட்டில் தற்போதுள்ள எம் பி யின் பெயரை எழுதி உள்ளார்கள் ஏன் அந்த எம்பி இந்த வீட்டை கான்கிரீட் வீடாக மாற்றி தரவில்லை.
அவர்கள் இதை தொழிலாக பார்க்கிறார்கள் நான் இதை சேவையாக பார்க்கிறேன்.
ஒரு நல்ல எம்பி ஆக செயல்பட நான் நினைக்கிறேன்.,நான் ஒரு கேரண்டி தருகிறேன், நான் வெற்றி பெற்ற பிறகு வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் இருக்கக்கூடிய 6 சட்டமன்ற தொகுதிகளிலும் எம்பி அலுவலகம் அமைக்கப்படும்.
ஆம்பூர் பைபாஸ் சாலையில் அனைத்து சமூகத்தினரும் பயன்படுத்தும் வகையில் ஒரு இலவச திருமண மண்டபம் அமைத்து தரப்படும்.,
அவ்வப்போது மருத்துவ முகாம்களை நடத்தி அனைவரையும் 90 வயது வரை நோய் நொடியின்றி வாழ வைக்கிறேன்.
என்னை எம்பி ஆக அனுப்புங்கள் நான் மந்திரியாக வந்து உங்களுக்கு சேவை செய்கிறேன் என்று வாக்குறுதிகளை அல்லி வீசி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

admin
