வெள்ள நிவாரணம் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம்! வேலூர் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் முதலமைச்சர் பேச்சு!
ஜிகே சேகரன்,,
வெள்ள நிவாரணம் கோரி உச்சநீதிமன்றத்தில் நாளை வழக்கு தொடரவுள்ளோம் என தமிழக முதல்வர் ஸ்டாலின் வேலூர் கூட்டத்தில் பேச்சு.
வேலூர்மாவட்டம், வேலூர் கோட்டை மைதானத்தில் அரக்கோணம் வேட்பாளர் ஜெகத்ரட்சகன், வேலூர் வேட்பாளர் கதிர் ஆனந்த் ஆகியோரை ஆதரித்து பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது.
திமுக பொதுசெயலாளர் துரைமுருகன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அமைச்சர்கள் ஆர்.காந்தி, எ.வ.வேலு சட்டமன்ற உறுப்பினர்கள் நந்தகுமார், கார்த்திகேயன், ஈஸ்வரப்பன், அமுலு,வில்வநாதன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதில் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலின் கலந்துகொண்டு பேசுகையில், தமிழ்நாட்டிற்கு தேர்தலுக்கு தான் சில பகுதி நேர அரசியல்வாதிகள் வருகிறார்கள்.அவர் வேறு யாரும் அல்ல பிரதமர் தான்.
தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி கனடா நாட்டில் அறிமுகபடுத்தப்படவுள்ளது என்பது நமக்கு எல்லாம் பெருமையாக உள்ளது.

திமுக ஆளுங்கட்சியாக இருந்தாலும் , எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி எப்போதும் பாஜகவை எதிர்க்கும்.
பழைய கச்சத்தீவு பிரச்சனையை பாஜக இப்போது பேசுகிறது.
10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த பாஜக ஏன் இதை பேசவில்லை. எத்தனை தடவை பிரதமர் லங்கைக்கு சென்றார் அப்போதெல்லாம் இலங்கை அதிபரிடம் ஏன் கச்சத்தீவைை பற்றி பேசவில்லை.
அருணாச்சலப் பிரதேசத்தில் சீனா ஆக்கிரமிப்பு செய்து 30 இடங்களுக்கு அதன் பெயரை வைத்து இருக்கிறது.
பெயர்தானே வைத்திருக்கிறார்கள் உரிமை கொண்டாட முடியாது என்று மத்திய அரசு சாக்கு போக்கு சொல்வது வேடிக்கையாக இருக்கிறது.
பாஜகவின் சர்வாதிகார ஆட்சியை எதிர்த்து பல மாநிலங்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படுகிறது.
குறிப்பாக கேரளா, கர்நாடக என அந்த வரிசையில் தமிழக அரசும் நாளை வெள்ள நிவாரணம் கேட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்குதொடரவுள்ளோம்.
எடப்பாடி பழனிச்சாமி பாஜகவுடன் கள்ளக் கூட்டணி வைத்து இருக்கிறார்.
புலி போல் பேசும் இபிஎஸ், பாஜக அரசு தமிழக மக்களுக்கு எதிராக செயல்படும்போது பூனையாக மாறிவிடுகிறார்.
வேலூர் விமான நிலையம் விரைவில் நடைமுறைக்கு கொண்டு வரப்படும், வேலூரில் மாம்பழச் சாறு தொழிற்சாலை திறக்கப்படும்.
மேலும் திமுக ஆட்சியின் போதெல்லாம் சிறுபான்மையினருக்கு செய்த அனைத்து திட்டங்களை குறித்தும் விரிவாக பேசினார் முதல்வர் ஸ்டாலின்
இதில் திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

admin
