சந்தன மலைப் பாதையை மறித்த பாறைகள்!
ஜி.கே.சேகரன்,
புதூர்நாடு செல்லும் மலை சாலையில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ! மூன்றாவது நாளாக சாலையை சரி செய்யும் பணியில் ஈடுபட்ட நெடுஞ்சாலை துறையினர்! மலையடிவாரத்தில் வரிசை கட்டி நிற்கும் வாகனங்கள்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் புயல் காரணமாக கனமழை பெய்தநிலையில் ஜவ்வாது மலைப்பகுதி, புதூர்நாடு, நெல்லிவாசல் மற்றும் அதனை சுற்றி உள்ள மலைக் கிராமங்களில் பெரும் சேதம் ஏற்பட்டிருக்கிறது.
இதன் காரணமாக ஆங்காங்கே புதிய நீரோடைகள் உருவாகி மலைப்பகுதியில் உள்ள புதூர்நாடு செல்லும் மாலை சாலையில் ஆங்காங்கே மண்சரிவு ஏற்பட்டது.
மேலும் 20க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு ராட்சத மரங்கள் மற்றும் பாறைகளும் உருண்டு சாலையின் குறுக்கே விழுந்துள்ளன.
இதுகுறித்து தகவல் அறிந்த திருப்பத்தூர் மாவட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கடந்த இரண்டு நாட்களாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 10-க்கும் மேற்பட்ட ஜேசிபி இயந்திரம், டிராக்டர்கள் மூலம் மண் சரிவு, சாலைகளில் விழுந்த பாறைகளை மற்றும் மரங்களை அகற்றி போக்குவரத்தை சரி செய்தனர்.
இருந்தபோதிலும் மீண்டும் மண் சரிவு ஏற்பட்டுள்ளது இதன் காரணமாக மூன்றாவது நாளாக நெடுஞ்சாலைத்துறையினர் மண் சரிவு மற்றும் பாறைகள் மற்றும் மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் காரணமாக மலை அடிவாரத்திலேயே வாகனங்களை தடுத்து நிறுத்தியுள்ளனர். மேலும் மலைச்சாலையில் அப்புறப்படுத்தும் பணி முடிந்த பின்னரே வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படும் எனவும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

admin
