பாலாறு அணைக்கட்டு நிரம்பியது...பொதுமக்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை!
கு.அசோக்,
இராணிப்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழையால் வாலாஜா பாலாறு அணைக்கட்டில் இருந்து 2,700 கன அடி தண்ணீர் வெளியேற்றம், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு.
தமிழகத்தில் ஃபெஞ்சல் புயல் கரையைக் கடந்தும் ஒரு சில மாவட்டங்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி இராணிப்பேட்டை மாவட்டம், இரணிப்பேட்டை, வாலாஜா, ஆற்காடு, சோளிங்கர் கலவை காவேரிப்பாக்கம், அரக்கோணம், திமிரி உட்பட அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நள்ளிரவு நேரத்தில் கனமழையானது கொட்டி தீர்த்தது.
இதன் காரணமாக நகரின் முக்கிய சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து பெய்த கன மழையால் இராணிப்பேட்டை மாவட்டத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 70 ஏரிகள் தனது முழு கொள்ளளவை நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
மேலும் 25 ஏரிகள் 99% சதவீதம் நிரம்பி உள்ளது, குறிப்பாக பாலாறு அணைக்கட்டில் வெள்ளப்பெருக்கு அதிக அளவில் ஏற்பட்டதால் பொன்னை மற்றும் பாலாறு ஆற்றில் வரக்கூடிய தண்ணீர் மகேந்திரவாடி, தூசி, காவேரிப்பாக்கம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு 2,700 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
நீர்வரத்து அதிகரிப்பால் பொதுமக்கள் யாரும் மீன்பிடிக்கவோ வேடிக்கை பார்க்கவோ செல்ல வேண்டாம் என முனைவர் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா அறிவுறித்துள்ளார்.

admin
