பொது சிவில் சட்டத்தை கொண்டு வருவதை எதிர்கிறோம்! செ.கு.தமிழரன் பேட்டி!
கு.அசோக்,
பொது சிவில் சட்டத்தை நாட்டில் கொண்டு வர மத்திய அரசு பெரும் முயற்சி மேற்கொண்டுள்ளது, அதை இந்திய குடியரசு கட்சி கடுமையாக எதிர்க்கிறது என்று செ.கு.தமிழரசன் சொன்னார்.
வேலூர்மாவட்டம்,வேலூர் சத்துவாச்சாரியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் இந்திய குடியரசு கட்சியின் கண்டன ஆர்பாட்டம் மாவட்டத்தலைவர் இரா.சி.தலித் குமார் தலைமையில் நடைபெற்றது. இதனை மாநில தலைவர் முன்னால் சபாநாயகர் செ.கு தமிழரசன் கலந்துகொண்டு துவங்கி வைத்தார்.
பொது சிவில் சட்டத்தை நாட்டில் கொண்டு வர மத்திய அரசு பெரும் முயற்சி மேற்கொண்டுள்ளது இதனை கொண்டு வருவதை கண்டித்தும் தமிழகத்தில் தனியாக செயல்பட்டு வரும் ஆதிதிராவிடர் நல பள்ளிகளை தமிழக அரசு பொது கல்வித்துறையோடு இணைக்கும் திட்டத்தினை உடனடியாக கைவிட வேண்டும்.
திருவள்ளூவர் பல்கலைக்கழகத்தில் தாத்தா ரெட்டை மலை சீனிவாசன் அவர்களுக்கு ஆய்வு இருக்கை ஒன்றை உடனடியாக அமைக்க வேண்டும்.
தலித் மக்களுக்கு சிறப்பு உட்கூறு திட்டத்தை தனி சட்டமாக இயற்றி நடைமுறைப்படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் திரளானோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.

admin
