மத்திய அரசை கண்டித்து தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் ஆர்பாட்டம்!

மத்திய அரசை கண்டித்து தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் ஆர்பாட்டம்!

  ஜி.கே.சேகரன், 

  தி.மு.க., கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்கள் கருப்புக்கொடி ஏந்தி தமிழகமெங்கும் ஆர்பாட்டம் நடத்தினர்.

  அதில் எம்.பி.க்கள், வை.கோ., திருமாவளவன்,கனிமொழி, கதிர் ஆனந்த், எம்.எல்.ஏ.க்கள்உதயநிதி, திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி = இனிகோ இருதயராஜ், அணைக்கட்டு ஏ.பி.நந்தகுமார் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

 மத்திய  அரசு  மக்கள் விரோத மற்றும் ஜனநாயக விரோத போக்கில் செயல்படுவதாகவும், மூன்று வேளாண் சட்டத்தை திரும்ப பெறவும், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை குறைக்கவும் அவர்கள் கோஷம் எழுப்பினர்.

 அதில்  சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தி.மு.க இளைஞரணி அலுவலகத்தில் உதயநிதி ஸ்டாலின் தலைமையிலும், சென்னை அண்ணாநகர் இல்லத்தில் வைகோ , சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஆ.ராசா , டிகேஎஸ் இளங்கோவன் உள்ளிட்டோர் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  

  சென்னை சி.ஐ.டி. காலனி இல்லத்தில் எம்.பி. கனிமொழி மற்றும் அசோக் நகர் விடுதலை சிறுத்தைகள் அலுவலகத்தில் சிதம்பரம் தொகுதி எம்.பி. திருமாவளவன் உள்ளிட்டோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 பின்னர் கனிமொழி எம்.பி. செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது,

  கொரோனா காலத்தில் விலைவாசி உயர்வு மக்களை கடுமையாக பாதித்துள்ளது. விவசாயிகளை பாதிக்கும் சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது என்றார்.

  வேலூர்மாவட்டம்,காட்பாடியில் தமிழக நீர்பாசனத்துறையின் அமைச்சரும் திமுக பொதுசெயலாளருமான துரைமுருகன் தனது வீட்டின் முன் மத்திய அரசைக்கண்டித்து கருப்பு கொடியேற்றி ஆர்பாட்டம் செய்தார் மத்திய அரசு மாநில அரசுகளின் உரிமைகளை பறிக்கும் செயலைக்கண்டித்தும் விவசாயிகளை பாதிக்கும் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும் பொதுமக்களை பாதிக்கும் பெட் ரோல் டீசல் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்தும் தொலைபேசி ஒட்டுகேட்பு விவகாரத்தை கண்டித்தும் இந்த ஆர்பாட்டம் நடைபெற்றது.

  இதில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த்,சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு கோஷங்களை எழுப்பினார்கள் இதே போன்று மாவட்டத்தில் பல இடங்களில் திமுகவினர் தங்களின் வீடுகளின் முன்பு மத்திய அரசைகண்டித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.